சிவந்தது மங்களூரு ********************* இது எங்கள் கோட்டை என்று கடந்த 10 ஆண்டுகாலமாக காவிக்கூட்டம் கொக்கரித்துவந்த நிலையில் , மங்களூரு, பிப்ரவரி 25 சனிக்கிழமையன்று சிவப்பின் கோட்டை என்பதை நிரூபித்தது.மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமை பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியது. காவிக்கும் பல்களின் மிரட்டல்களை மீறி ஆயிரம் ஆயிரமாய் செங்கொடியேந்தி மக்கள் குவிந்தனர். இப்பேரணியை அறிவித்த நாள்முதலே ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம், சீர்குலைவு வேலைகளில் இறங்கியது. இன்னும் குறிப்பாக கேரளமுதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார் என்று அறிவித்தவுடனே, பினராயிக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பரிவாரம் கூப்பாடு போட துவங்கிவிட்டது. மங்களூரு அமைந்துள்ள தட்சிண கன்னடா மாவட்டத் திற்குள் பினராயி விஜயனை நுழைய விடமாட்டோம் என்று கூச்சல் போட்டது.பினராயி வரும் நாளில் பந்த்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கூட்டம்நடக்கும் மங்களாபுரம் அமைந்துள்ள உல்லால்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தீக்கிரையாக்கியது. பினராயி வருகையை அறிவித்த பேனர்கள் ,போஸ்டர்கள், சுவரெழுத்துக்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. பினராயி வருகைக்குமுதல்நாள் பாஜக எம்.பி.யும் எம்எல்ஏக்களும்மதவெறி குண்டர்களுக்கு தலைமையேற்று, வன் முறை பேரணி ஒன்றை நடத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதற்கும் அஞ்சவில்லை. திட்டமிட்டபடி பினராயி விஜயன் வருகைதந்தார். கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலிருந்து ஆயிரம் ஆயிரமாய் மக்கள் குவிந்தனர். கேரளத்தைப் போல் கர்நாடகமும் ஆர்எஸ்எஸ் மதவெறிக்கு எதிராக நிற்கிறது என முழங்கினர். இந்தியாவின் மிகப்பெரும் தேசவிரோத சக்திஆர்எஸ்எஸ் என்பதை அம்பலப்படுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் முழங்கினார் பினராயி. 1980-கள் வரையில் சிவப்புக்கோட்டை என அழைக்கப்பட்ட தட்சிண கன்னடா மாவட்டமும் மங்களூரு மாநகரமும் மீண்டும் செம்மயமானதில் பெருமிதம் கொண்டது. http://epaper.theekkathir.org/