புரட்சியின் சாதனைகள் புரட்சிக்குப்பின்பு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இந்த உரிமை பிரிட்டனில் 1928ஆம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. **************************************************** 1960கள் வரையிலும் சோவியத் யூனியனில் பொருளாதார வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமான முறையில் இருந்தது. அதனை மோசமாக விமர்சித்தவர்களும்கூட இதனை ஒப்புக்கொள்வார்கள். மிகவும் மதிக்கத்தக்க பிரிட்டிஷ் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்குஸ் மாடிசன் குறிப்பிட்டிருப்பதாவது: 1913க்கும் 1965க்கும் இடையேயான ஆண்டுகளில் ஒவ்வோராண்டும் ஏற்பட்ட சோவியத் பொருளாதார வளர்ச்சி என்பது உலகில் மிகவும் வேகமானது, அனைத்து பெரிய அல்லது வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகளின் வளர்ச்சியைவிட வேகமானது. ஜப்பானைவிட வேகமானது. ஜப்பானின் உற்பத்தி வளர்ச்சி 400 சதவீதம் என்று கூறக்கூடிய அதே சமயத்தில், சோவியத் யூனியன் உற்பத்தி வளர்ச்சி 440 சதவீதமாகும். n உள்நாட்டு யுத்தம் முடிந்ததற்குப்பின்னர் முதல் பத்தாண்டுகளில் கல்லாமை முழுமையாக ஒழித்துக்கட்டப் பட்டுவிட்டது. n அனைவருக்குமான ஆரம்பக் கல்விக்கு வகை செய்யப்பட்டது, அனைவருக்குமான கல்விக்காக ஏழு ஆண்டுகள் ஒதுக்கியபின்னர், அனைவருக்குமான இடைநிலைக் கல்விக்குப் பத்தாண்டுகள் ஒதுக்கப்பட்டது. இந்தசமயத்தில் சோவியத் யூனியனின் சாதனையை எந்தவொரு ஐரோப்பிய நாடும் எய்திடவில்லை. n நிலப்பிரபுத்துவமுறை ஒழித்துக்கட்டப்பட்டது. ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கூட்டுப்பண்ணைகள் மூலமாகவும் கூட்டுறவுகள் மூலமாகவும் நிலம் வழங்கப்பட்டன. n புரட்சியைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ பாதுகாப்பு உடனடியாக அமல்படுத்தப்பட்டது, n அனைவருக்கும் வேலை அளிக்கப்பட்டது. வேலையில்லாமை ஒழிக்கப்பட்டது. அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டதால், 1936ஆம் ஆண்டில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் மூடப்பட்டன. n புரட்சிக்குப்பின்னர் பொறுப்பேற்ற புதிய அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்று பெண்களுக்கு சம உரிமைகள், சம ஊதியங்கள் வழங்கப்பட்டதாகும். மகப்பேறு பயன்களுக்கான உரிமைகளும், மணவிலக்கு பெறும் உரிமையும் வழங்கப்பட்டது. புரட்சிக்குப்பின்பு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இந்த உரிமை பிரிட்டனில் 1928ஆம் ஆண்டில்தான் வழங்கப்பட்டது. n மக்களுக்கான கலாச்சார நடவடிக்கைகள் அபரிமிதமானமுறையில் விரிவாக்கப்பட்டன. திரைப்படங்கள் தயாரித்தல், இசை மற்றும் கலை முதலிய கலாச்சார உற்பத்திக்கும், புத்தகங்கள் அச்சடிப்பதற்கும் அரசே நிதி உதவி அளித்தது. சிபிஎம் மத்தியக்குழு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து... தமிழில் : ச.வீரமணி http://epaper.theekkathir.org/