கல்லூரிக்குள் காவி வன்மம் ********************* தேசப்பற்றுக்குச் சான்றிதழ் வழங்குகிற உரிமத்தைத் தாங்களே எடுத்துக்கொண்டிருக்கிற சங்பரிவாரம், வன்முறை மூலமே அதைச் செயல்படுத்துகிறது. தில்லியின் ரம்ஜாஸ் கல்லூரியில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டம் இதற்கு சமீபத்திய சாட்சி. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் இக்கல்லூரியின் ஒரு உரையரங்க நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் துணைத் தலைவரும், அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஷெஹலா ரஷீத் மற்றொரு உரையாளர். சென்ற ஆண்டு பல்கலைக்கழகத்தில் நடந்தபோராட்டத்தையொட்டி மாணவர் பேரவைத்தலைவர் கன்னய்ய குமார் உள்ளிட்டோர் மீதுதேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும், கைதுசெய்யப்பட்டதும் தெரிந்ததே.அவ்வாறு வழக்குப்போடப்பட்டிருப்பவர்களில் உமர் காலித்தும் ஒருவர்.இவர்களது வருகையை எதிர்த்துதான், ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் செயல்படும் ஏபிவிபி அமைப்பினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரை எப்படி அழைக்கலாம் என்று முதலில் பிரச்சனை கிளப்பியவர்கள் பின்னர் ஹாக்கி மட்டைகளாலும் கற்களாலும்எதிர்த்தரப்பு மாணவர்களையும், செய்தியாளர்களையும் தாக்கினர். முதலில் பிப்.21 செவ்வாயன்று தாக்கியவர்கள், மறுநாளும் தொடர்ந்தனர். செய்தியாளர்கள் உட்பட பல மாணவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கு முடிந்து தீர்ப்பில் குற்றவாளிகள்தான் என்றுஅறிவிக்கப்படும் வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றமற்றவர்களாகவே கருதப்பட வேண்டும் என்ற நெறியெல்லாம் மதவெறிக்குக் கிடையாது. மேலும், நடைபெறவிருந்த கருத்தரங்கின் தலைப்பே, ‘போராட்டப் பண்பாடு’ என்பதுதான். சுரண்டல் வர்க்கத்திற்கும், மதவாத-சாதியஆதிக்கவாதிகளுக்கும் சேவகம் செய்யப் புறப்பட்டவர்களால் இப்படிப்பட்ட விவாதப் பொருள்களை சகித்துக்கொள்ள முடியாதுதான்.மாணவர்களிடையே விவாதப் பண்பாட்டை வளர்க்க வேண்டிய கல்லூரி நிர்வாகம், ஏபிவிபிமிரட்டலால் உமர் காலித், ஷெஹலா ரஷீத்ஆகியஇருவருக்கும் விடுக்கப்பட்ட அழைப்பை விலக்கிக்கொண்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற மாணவர்கள் மீதுதான்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு நாள்தாக்குதலின்போதும் தில்லி காவல்துறையினர் தலையிடாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். எந்தவொரு சூழலையும் மதவெறியைக் கிளறிவிடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள இக்கும்பல் தயங்குவதில்லை. பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவின் வனச் சட்ட மீறலை அங்கீகரிப்பது போல் ஆதிசிவன் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்ததன் பின்னணியிலும் கூட, மக்களின் நம்பிக்கைகளைப் பயன்படுத்தி இங்கேயும் வகுப்புவாத அரசியலுக்குக் களம் அமைக்கிற உள்நோக்கம் இருக்கிறது. தில்லி கல்லூரி முதல்கோவை ஈஷா மையம் வரையில் இப்படிமக்களின் உணர்வுகளை மதவாத அடிப்படையில் குவிப்பதன் மூலம் இரண்டு நோக்கங்களை நிறைவேற்ற முயல்கிறார்கள். ஒன்று -மத்திய ஆட்சியாளர்களின் தோல்விகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவது; இன்னொன்று -ஒற்றை மத ஆதிக்க நாடாக இந்தியாவைமாற்றுகிற சூழ்ச்சிக்கான உரை கற்களை உரசிக்கொண்டே இருப்பது. மக்கள் நல்லிணக்கத்தில் பற்றுள்ள சக்திகள் முறியடித்தாக வேண்டியமோசமான நோக்கங்கள் இவை. http://epaper.theekkathir.org/