தலித், பழங்குடி மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு ஈஷா மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு தூத்துக்குடி, பிப்.28- ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ள தலித், பழங்குடியினரின் நிலத்தைஅவர்களுக்கே பிரித்து வழங்க வலியுறுத்திதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மார்ச் 10ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழுக் கூட்டம் பிப்.26,27 தேதிகளில் தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், பெ.சண்முகம், கு.ஜக்கையன், சு.சிங்காரவேலு உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலித், பழங்குடி மக்களின் நிலங்களைசட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஈஷாமையத்தை எதிர்த்து கோயம்புத்தூரில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், அம் மையத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி வருகை தந்ததை கண்டித்தும், தலித்,பழங்குடி மக்களின் நிலத்தை அவர்களுக்கே பிரித்து வழங்கிட வலியுறுத்தியும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடிய இடதுசாரி மற்றும் தலித் இயக்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் மார்ச் 10 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென கூட்டம் முடிவு செய்தது. பஞ்சமி நில மீட்புபஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்கிட மார்ச் 27 அன்று பஞ்சமிநில மீட்பு போராட்டங்கள் நடத்துவது.ஆணவக் கொலைகளுக்கு எதிராக நடைபயணம்ஆணவக் கொலைகளை தடுத்திடு, தனிச்சட்டம் இயற்றிடு என வலியுறுத்தி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட பள்ளிபாளையத்தில் இருந்து சென்னை வரை ஜூன் மாதத்தில் நடைபயணம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.துணைப்பொதுச் செயலாளர்கள்:கூட்டத்தில் ப.பாரதிஅண்ணா, டி.செல்லக்கண்ணு, சின்னைபாண்டியன் ஆகியோர் மாநில துணை பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே எஸ்.கே.மகேந்திரன், யு.கே.சிவஞானம் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். தீர்மானங்கள்:கேரளத்தின் வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றதோடு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜார்ஜ் ஜோசப் நினைவு தினமான மார்ச் 5 அன்று அரசு மரியாதை செய்திட வேண்டும். அவரது பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.தருமபுரி இளவரசன் வழக்கு குறித்த சி.பி.சி.ஐ.டி பிரிவின் முடிவை ஏற்க இயலாது. எனவே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள் மராமத்து பணிகளுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சிக் கடைகளில் ஆட்டிறைச்சிக் கடைஏலத்தொகை ரூ.1000 என இருக்கும் போது மாட்டிறைச்சிக் கடைகளுக்கான ஏலத்தொகை ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டதை மாநிலக்குழு கண்டிக்கிறது. அத்துடன் இந்த பாரபட்சமான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பட்டியல் இனத்தவர்களுக்கு குரு பட்டம் வழங்காமல் சாதி பாகுபாடு காட்டும் சிவகங்கை கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து மார்ச் 14 அன்று சிவகங்கையில் பொது விசாரணை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு26ஆம் தேதி மாலையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், ‘தீண்டாமை ஒழிப்பின் இலக்கும் பயணமும்’ என்ற தலைப்பிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் ‘தீட்டும் புனிதமும்’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் சாம்பசிவன் அனைவருக்கும் நன்றி கூறினார். http://epaper.theekkathir.org/