Tuesday, February 28, 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக! மக்கள் நலக் கூட்டியக்கம் ஆவேச ஆர்ப்பாட்டம் ********************************* புதுக்கோட்டை, பிப்.28- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக் கூட்டு இயக்கத் தலைவர்கள் முழக்கமிட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் வகையில் கர் நாடகாவைச் சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் கம்பெனிக்கு கடந்த 15-ஆம் தேதி மத்திய அரசுஅனுமதி அளித்து, அன்று முதல் திட்டத்தைக் கைவிடக்கோரி நெடுவாசல் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பல வடிவங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டம் நாளுக்கு நாள் உச்சகட்டம்அடைந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமையன்று ஆலங்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கவிவர்மன்(சிபிஎம்), த.செங்கோடன்(சிபிஐ), ப.சசிகலைவேந்தன், செ.ம.விடுதலைக்கனல்(விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.போராட்டத்தில் சிபிஎம் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எம்.முத்துராமலிங்கம், எம்.உடையப்பன், எஸ்.சங்கர்,எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ராமையன், கே.சண்முகம், சிபிஐ சார்பில் டாக்டர் வே.துரைமாணிக்கம், சிவஞானம், மு.மாதவன், கே.ஆர்.தர்மராஜன், எம்.என்.ராமச்சந்திரன், ராஜேந்திரன், ஏ.எல்.ராசு, விசிக சார்பில் கலைமுரசு, சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அது மாநில அளவிலான போராட்டமாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெடுவாசலில் தலைவர்கள் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர் சென்று போராடும் மக்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். தலைவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.நெடுவாசலில் தமிழகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் பெருமளவில் குவிந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். http://epaper.theekkathir.org/