Thursday, February 23, 2017

ஏப்.4ல் கோட்டை முன்பு முற்றுகை : தையற்கலை தொழிலாளர்கள் அறிவிப்பு திருவாரூர், பிப்.23 - தையற் கலை தொழிலாளர்களின்பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 4 ஆம் தேதியன்றுசென்னை கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்என திருவாரூரில் நடைபெற்றசம்மேளன மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.செவ்வாய்க் கிழமையன்று சம்மேளனத் தலைவர் கே.செல்லப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் துவக்க உரையாற்றினார். சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஐடாஹெலன், சிஐடியுமாநில துணைத் தலைவர் டி.ஏ.லதாஉள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிஐடியு திருவாரூர்மாவட்டத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், செயலாளர் டி.முருகையன், பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன், தையல் சங்க நிர்வாகிகள் இரா.மாலதி, டி.ஜெகதீசன் மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சமஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். புதியவேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று லட்சக்கணக்கானோரை திரட்டி சென்னை கோட்டை முன்புமுற்றுகை போராட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த ஒரு வருடமாக நலவாரியங்கள் முடங்கி போயுள்ளதால் சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே பணப் பயன்களை இரட்டிப்பாக்கி நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டது. http://epaper.theekkathir.org/