வாடிவாசலைப் பின்தொடர்கிறது நெடுவாசல் மீண்டும் வெகுண்டெழுகிறது தமிழகம் 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு சென்னை, பிப். 23 - புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடும் சதிவேலையில் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இறங்கியுள்ள நிலையில், இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமன்றி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள், சமூகநல அமைப்புக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஐடி துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே, ஓ.என்.ஜி.சி அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு, அவர்களை நெடுவாசல் கிராமத்திற்கு உள்ளேயே நுழைய விடாமல் செய்த பொதுமக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தற்போது கையெழுத்து இயக்கத்தைத் துவங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் பிப்ரவரி 27-ஆம்தேதி உண்ணாவிரதப் போராட் டத்திற்கும் அறைகூவல் விடுத்துள் ளனர். பாலைவனமாக்கும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் அமைந் துள்ளது நெடுவாசல் கிராமம். தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி நல்லமண்வளம் நிறைந்த பகுதியாகும். நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளையக்கூடிய நிலம்.இங்கு கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எரிவாயு சோதனைக்காக இரண்டு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்குஆழ்துளைக் கிணறு அமைத்தது.அப்போது கிராம மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்கவே, திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. வேறு சில விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த நடந்தமுயற்சியும் தடுத்து நிறுத்தப்பட் டது.இந்நிலையில் தமிழகத்தில் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு, கடந்த மாதம் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. இதில் நெடுவாசலும் ஒன்று. மோடி அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஓராண்டுக்கும் மேலாக நெடுவாசல் விவசாயிகள்எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மோடி அரசு தடாலடியாக அளித்த இந்த ஒப்புதல் விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நெடுவாசல் பகுதிவிவசாயிகளிடம் ஒரு கருத்துக் கேட்புக் கூட்டத்தைக் கூட மோடி தலைமையிலான பாஜக அரசு நடத்தவில்லை; விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலும், திட்டம் குறித்த எந்தவித விளக் கத்தையும் அளிக்காமலும் மோடி அமைச்சரவை தன்னிச்சையாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது விவசாயிகளை கொந்தளிக்க வைத்தது. ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவிவருகிறது. நிலத்தடி நீர் பலநூறு அடிக்கு கீழே போய்விட்டது. பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிக்க நீர்எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஓரளவு தண்ணீர் கிடைக்கக் கூடிய நெடுவாசல் பகுதியிலும் தண்ணீர் உறிஞ்சப்படுமானால் என்ன ஆவது? என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழுந்தது. இந்தஆண்டு வறட்சியால் விவசாயிகளின் தற்கொலை சாவுகள் அரங்கேறும் சூழலில், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒரேயடியாக விவசாயிகளின் வாழ்க்கையைகுலைத்தும் போடும் அபாயம் இருப்பதை உணர்ந்தனர். போராட்டம் அறிவிப்பு இதன் அடிப்படையிலேயே, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பை வெளிப் படுத்திய விவசாயிகளும், பொது தொடர்ச்சி 6ம் பக்கம் http://epaper.theekkathir.org/