Wednesday, February 22, 2017

ஈசன் பேரருளும் மாகாளி கடைக்கண்ணும்... 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9, 10ஆம் தேதிகளில் செய்தி நிறுவனம் ஒன்று அனுப்பிய முக்கியத் தகவலானது உலகையே குலுக்க ஆரம்பித்திருந்தது. இரு தினங்களுக்கு முன்னர், அதாவது நவம்பர் 7ஆம் தேதியன்று ரஷ்யாவின் ஆட்சி பீடத்திலிருந்த கெரன்ஸ்கி அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்டனர் என்றும், புதிய அரசாங்கம் புரட்சிகரமான கொள்கைகளைப் பிரகடனப்படுத்தியுள்ளதென்றும் அந்தத் தகவல்கள் பறைசாற்றின. ------------------------------- ஆங்கிலேய ஆட்சியின் கோரப்பிடியிலிருந்து தப்புவதற்காக புதுவைக்கு வந்த பாரதி, அங்கிருந்து கொண்டே உலக நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வரலானார். ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்தது அவருக்கு அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. புதியதொரு உலகநியதி. முன்னெப்பொழுதும் கண்டும், கேட்டுமிராத புதிய முறைமை உருவாகப் போகிறது என்ற அற்புதமான நம்பிக்கையை அவருள்ளத்தில் எழச் செய்தது. ரஷ்ய நிலைமை எதுவும் பாரதிக்குப் புதிதல்ல. கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தீவிரவாத காங்கிரஸ்காரராக இருந்த பாரதி 1905 ஆம் ஆண்டில் ரஷ்யப் புரட்சி நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தவர். ஜார்மன்னனின் பேயாட்சிக்கெதிராக மனுக்கொடுக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தொழிலாளிகளைக் கொன்று அவர்தம் உதிரத்தைக் குடித்துத் தீர்த்ததையும் அவற்றுக்கெதிராக ஆவேசமாகப் போராடிய ரஷ்யத் தொழிலாளி மக்களை ஈவிர்க்கமின்றி ஒடுக்கியதையும் கண்டு இதயம் கொதித்தவர் பாரதி. ஆனால் அவர் சோர்வடைந்துவிடவில்லை. தான் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்.‘சுயாதீனத்தின் பொருட்டும் கொடுங்கோன்மை நாசத்தின்பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக’’12 ஆண்டுகளுக்குப் பிறகு 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் புரட்சியாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் நடைபெற்றபொழுது பாரதி ஒரு கற்பனைக் கதை எழுதினார். ‘காக்காய் பார்லிமெண்ட்’ என்ற தலைப்பிலான அந்தக் கதையில் பாரதி எழுதுகிறார்:‘‘கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார்சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்திவிட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானகோடி சம்பளமாம்’’.இந்தக் கதையை எழுதிய ஏழு மாத காலத்திற்குள்ளாகவே பாரதிக்கு மகத்தான நவம்பர் 7 புரட்சி குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. அவர் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகின்றது. கவிதை வரிகள் அவரது எழுத்தில் களிநடனம் புரிகின்றன.மிகப்பெரும் அழிவு சக்தியாகவும், தனிப்பெரும் ஆக்க சக்தியாகவும் தான் கருதி வணங்கும் காளியின் செயலாகவே ரஷ்யப் புரட்சி என்ற எதார்த்த நிகழ்ச்சிப் போக்கை பாரதி வடிவமைத்துக் காண்கிறார்.மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற் கடைக்கண் வைத்தாளங்கேஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்வாகான தோள்புடைத்தார் வானமரர் பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்; வையகத்தீர் புதுமை காணீர்! ------------------------------------------------------------------------------ இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்ஜாரெனும் பே ரிசைந்த பாவிஇம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வசனவாசம்------------------------------------------------------------------------------இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்------------------------------------------------------------------------------குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி------------------------------------------------------------------------------அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போ தடிமையில்லை அறிக என்றார்இடிபட்ட சுவர் போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ!ஜார் எனும் சனியன் தொலைந்துவிட்டான். பஞ்சத்திலும், துன்பத்திலும் மக்களை ஆழ்த்தும் கலியுகம் முடிவுற்றவிட்டது. அநியாயங்கள் தொலைந்து அன்பே தெய்வமென்று கூறும் கிருதயுகம் தோன்றட்டும் என்று பாரதி ரஷ்யப் புரட்சிக்கு கட்டியங்கூறி வரவேற்கிறார்.‘காலைப்பொழுது’ என்ற பாடலில் குருவியும், காக்கையும் பேசிக் கொள்வது போலவும், குருவி அப்பொழுது கற்றறிந்த காக்கையே, பேசுக நீ என்பதாகவும் காக்கை உடனே பேசுவதாகவும் பாரதி ஒரு கவிதை புனைந்திருக்கிறார். ‘‘அப்போது காக்கை, அருமையுள்ள தோழர்களேசெப்புவேன் கேளீர், சில நாளாக காக்கையுள்ளேநேர்ந்த புதுமைகளை நீர் கேட்டறியீ ரோ?சார்ந்து நின்ற கூட்டமங்கு சாலையின் மேற்கண்டீரே?மற்றந்தக் கூட்டத்து மன்னவனை காணீரே?கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்வாழியவன் எங்கள் வருத்த மெலாம் போக்கிவிட்டான்சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை; துன்பமில்லை.போற்றற் குரியான் புதுமன்னன் காணிரோ?’’என்று காக்கை மூலம் லெனினைப் புகழ்கிறார் பாரதி.ரஷ்யப் புரட்சி முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற ஏழாம் நாள் பாரதி பாடிய பாடல் என்று இதனைக் கூறுவர்.தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலின் ‘‘மகாகவியின் ஆனந்தமும் ஆதங்கமும்’’ எனும் பகுதியிலிருந்து... http://epaper.theekkathir.org/