துவங்கியது மக்கள் நாடக விழா தஞ்சாவூரில் கோலாகலம் தஞ்சாவூர், பிப்.22- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் நடத்தும் தென்னிந் திய மக்கள் நாடக விழா புதன்கிழமை தஞ்சையில் எழுச்சியுடனும் கோலாகலத் துடனும் துவங்கியது.தஞ்சை பழைய பேருந்து நிலையம்அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கரகாட்டக் கலைஞர் கலைமா மணி தேன்மொழி இராஜேந்திரன் மாலை அணிவித்திட, அறிஞர் அண்ணா சிலைக்கு தப்பாட்டக் கலைஞர் ரங்கராஜன் மாலை அணிவித்திட, கலைஞர் களின் மாபெரும் பேரணியை பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து கவிஞர் வெண்புறா தலைமையில், தேன்மொழி இராஜேந்திரன் துவக்கி வைத்தார். பேரணியில் தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், பிரளயன், எஸ்.கருணா, களப்பிரன், ச. ஜீவபாரதி, ஸ்ரீரசா,கவிஞர் ஜீவி, பேராசிரியர் முருகேசன், கவிஞர் வெ.ஜீவகுமார், சாமி.நடராஜன், செந்தில், மாலதி, தமிழ்ச்செல்வி உள்பட நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்றனர்.பேரணி பழைய பேருந்துநிலையம், கீழவீதி, வழியாக அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீதமகாலை அடைந்தது. தஞ்சை மண்ணின் பெருமை அங்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் தலைமை வகித்து நாடக அரங்குகளைத் திறந்து வைத்தார். அப்போது அவர், ‘மாமன்னர் சரபோஜி கட்டிய சங்கீத மகாலில் நாடகங் களை நடத்த இருக்கிறோம். பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் தஞ்சை மண்ணில் தலைமையாசிரியராக இருந்த தஞ்சை ராமையாதாஸ், பள்ளிக் கூடத்திற்கு கதராடை அணிந்து வந்தார் என்பதால் நிர்வாகத்தினரால் நட வடிக்கை எடுக்கப்பட்டார். அதன் காரணமாக வேலையைத் துறந்துவிட்டு முழுநேர கவிஞராகி நிறைய பாடல்களை நமக்கு வழங்கியிருக்கிறார். அத்தகைய தஞ்சை மண்ணில் நாடக அரங்குகளைத் திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ராமானுஜம் அரங்கத்தை தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் இரா.குணசேகரன் திறந்து வைத்தார். கே.ஏ. குணசேகரன் அரங்கத்தை உமா அமரநாதன் திறந்து வைத்தார். பாவலர் ஓம் முத்துமாரி அரங்கத்தை பிரேமா திறந்து வைத்தார். திருவுடையான் அரங்கத்தையும் அதில் உள்ள மோகன்தாஸ் வடகராவின் காலத்தில் உறைந்த நாடக கணங்கள் புகைப்படக் கண்காட்சியையும் வெளி. ரங்கராஜன் திறந்து வைத்தார். தொடக்க விழா பின்னர் மக்கள் நாடகவிழாவின் தொடக்கவிழா துவங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.விழாக்குழுத் தலைவர் களப்பிரன் வரவேற்புரையாற்றினார். விழாக்குழு செயலாளர் ச. ஜீவபாரதி, 1979இல் நடை பெற்ற நாடகவிழாவிற்கும் இந்த நாடக விழாவிற்கும் இடையிலான வரலாற்றை எடுத்துரைத்தார். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைக்கும் நோக்கம்... தொடர்ந்து இந்நாடகவிழாவின் நோக்கவுரை குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் பிரளயன் விளக்க மளித்தார். அப்போது அவர் 1979இல் தஞ்சையில் நடைபெற்ற நாடக விழாவில் கர்நாடக சமுதாயா நாடக அமைப்பைச் சார்ந்த பிரசன்னா மூன்று நாட்களும் ஆற்றிய உரைமற்றும் பங்களிப்பு தன்னிடம் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்கினார். அதனைத் தொடர்ந்து 1984 மற்றும் 1997களில் சென்னையில் நாடக விழாக்கள் நடத்தியதைச் சுட்டிக் காட்டினார்.இப்போது இங்கே இன்று தொடங்கும் நாடக விழாவில் 29 நாடகக்குழுக்கள் பங்கேற்கின்றன என்றும், அனைத்து நாடகங்களும் பல்வேறு அரங்கங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.மக்கள் நாடக விழா என்று பெயர் வைத்திருப்பதற்கு ஓர் அரசியல் பொருள்உண்டு என்றும், அதனைப் புரிந்து கொண்டுதான் அப்பெயரைச் சேர்த்திருக் கிறோம் என்றும் குறிப்பிட்டார்.ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்டு, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைப்பதற்காக போராடுகின்ற அனைவரையும் ஒருங்கிணைந்து ஒரேமேடையில் கொண்டுவருகிற ஒரு முயற்சியாகவே இவ்விழாவை நடத்துகிறோம் என்றும் கூறினார். புனிதா கணேசன் தென்னிந்திய மக்கள் நாடக விழாவின்கவுரவத் தலைவரான புனிதா கணேசன் உரையாற்றுகையில், இம்மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு எங்கள் பாரத் கல்லூரி யின் முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என்று உறுதி அளித்தார். இரா. குணசேகரன் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன் உரையாற்றுகையில், தஞ்சையில் இந்நாடக விழாவில் பங்கேற்க வந்தி ருக்கும் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டுவதோடு, நாடக விழா முழு வெற்றி பெற தென்னக பண்பாட்டு மையம் முழு ஒத்துழைப்பு நல்கும் என்றும், தேவையான உதவிகளைச் செய்திடும் என்றும் தெரிவித்தார். தில்லிப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரவீந்திரன், வெளி ரங்க ராஜன், கலைராணி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.விழாக்குழு பொருளாதாளர் விஜய குமார் நன்றி கூறினார். http://epaper.theekkathir.org/