Monday, February 27, 2017

மணப்பாடு படகு சவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி திருநெல்வேலி, பாளையங்கோட்டை கேலக்ஸி மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் ரஞ்சனி, சிவகார்த்திகா ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். மாவட்ட ஆட்சியர்கள் மு.கருணாகரன் (திருநெல்வேலி), எம்.ரவிக்குமார் (தூத்துக்குடி), காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.