Friday, February 24, 2017

வரலாறு காணா வறட்சி வஞ்சம் இழைக்கும் ஆட்சி மார்ச் 2-6 தமிழகம் முழுவதும் சிபிஎம் பிரச்சாரப் பயணம் சென்னை, பிப்.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்ச்.2-ஆம் தேதி தொடங்கி6-ஆம் தேதி வரை மண்டல அளவிலான வாகனப் பிரச்சாரம் நடைபெறஉள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:வரலாறு காணாத வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, ரேசன் பொருட்கள் குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமை உள்ளிட்ட பிரச்சனைகள் தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.ஆனால், அதே நேரத்தில் அதிமுகவின் அதிகாரப் போட்டி, திமுகவின்அதிகார வேட்கை, ஆளுநரின் பொறுப்பற்ற செயல்பாடு, அரசியல் ஆதாயம் தேட பாஜகவின் புறவழித் தலையீடு என மக்களின் பிரச்சனைகள் திசை திருப்பப்படுகின்றன.இதனை தமிழக மக்களிடம் விளக்கவும் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தும் மார்ச் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ஒன்பது மண்டலங்களாக பிரச்சார இயக்கத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநிலகுழு உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குகின்றனர். பிரச்சாரத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரச்சாரக் குழுக்கள் வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், பி.சுகந்தி, ஆர்.வேல்முருகன் மற்றும் எம்.செந்தில் ஆகியோர் பங்கேற்கின்றனர்.வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, ஆர்.கருமலையான், ஜி.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சார இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் வி,மாரிமுத்து, கே.சாமுவேல்ராஜ், எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மதுரை மாநகர், புறநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சார இயக்கத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, ஆர்.அண்ணாதுரை, எஸ்.கண்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்,கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.திருநாவுக்கரசு, ஆர்.மல்லிகா மற்றும் எஸ்.பாலா ஆகியோர் பங்கேற்கின்றனர்.விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங் களில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா,ஜோதிராம், எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் எம்.மகாலெட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நடைபெறும்பிரச்சாரப் பயணத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர்கள் ப.சுந்தரராசன், ஜி.சுகுமாறன், கே.ஜோதிலெட்சுமி மற்றும் வி.மாரியப்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், என்.அமிர்தம் மற்றும் பி.உச்சிமாகாளி ஆகியோர் பங்கேற்கின்றனர்.திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னதுரை,மாலதிசிட்டிபாபு ஆகியோர் இடம்பெறுகின்றனர்.மேலும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் இந்த பயணங்களில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். அனைத்து பிரச்சாரப் பயணங்களிலும் கலைக்குழுக்கள் இடம்பெறுகின்றன. இதையொட்டி லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடப்படுகின்றன. http://epaper.theekkathir.org/ See Translation