‘நாங்கள் வழங்குவதே செய்தி’ ************************* கோயம்புத்தூர், பிப்.24- ஈஷா மைய சட்டவிரோத சிலை திறப்பு விழா தொடர்பாக, தாங்கள் வழங்குவதையே செய்தியாக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சிலை திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் அதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு ஈஷா மையத்திற்கு ஆதரவான ஒரு சில செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தீக்கதிர் நாளிதழ் மற்றும் சன், சத்தியம் உள்ளிட்ட தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு ஈஷா மையத்தால் செய்தி சேகரிக்க முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், ஈஷா மையத்தால் அனுமதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும் தங்களுடைய வீடியோ கேமரா ஆகியவற்றை உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக,ஈஷா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிவாளர்கள் வழங்கும் காட்சிகளை மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற உத்தரவிற்கு பின்னே,அழைத்துச் செல்லப்பட்டனர். http://epaper.theekkathir.org/