Wednesday, February 22, 2017

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம் திருநெல்வேலி,பிப். 21-பென்சன் பணத்தை முழுவதுமாக முதல் தேதியே வழங்கக் கோரி நெல்லையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும்அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள்(ரேவா) காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.மாதந்தோறும் பென்சனை முழுமையாக வழங்க வேண்டும்,நிலுவைகளை உடனே வழங்க வேண்டும், பென்சனை அரசே ஏற்றுநடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார் பேட்டை தாமிரபரணி பணிமனை முன்பு சுமார்100க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அரசுவிரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இருந்து அரசு விரைவு போக்குவரத்து ஒய்வு பெற்றோர்கள் பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடைபெறும் இடத்தை வந்தடைந்தனர்.காத்திருப்புப் போராட்டத்திற்கு பி.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ,நிர்வாகிகள் காளத்திநாதன் ,எஸ்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யுமாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்ககூட்டமைப்பு தலைவர் சண்முகசுந்தரம்,சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கமாவட்ட பொது செயலாளர் எஸ்.ஜோதி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். போராட்டத்தில் ரேவா நிர்வாகிகள் எஸ்.பத்மநாபன்,தங்கராஜ்,எட்டப்பன்,ஜெயபாண்டி,கருப்பசாமி,சேதுராமலிங்கம்,சண்முகநாதன்,சேதுராமலிங்கம், லத்தீப், டி.பத்மநாபன், பிராங்க்ளின் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/