பணப்பலன்களை உடனே வழங்கக்கோரி ஓய்வு பெற்றோர் காத்திருப்புப் போராட்டம் நாகர்கோவில், பிப்.21-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி எப் தொகை 2014ம் ஆண்டு மே மாதம் முதல் வழங்கப்படவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கிராஜுவிட்டி 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவில்லை. இது போன்று அரசு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கம்யுட்டேசன் மற்றும் சேமநலநிதி , டி ஏ உயர்வு பென்சன்தொகை உட்பட அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாய்கிழமையன்று ராணித்தோட்டம் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் குட்டப்பன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சுந்தர்ராஜ் துவக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பால்ராஜ் , சிஐடியு சம்மேளன உறுப்பினர் லெட்சுமணன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக சங்க துணை பொதுச் செயலாளர் பொன் சோபன்ராஜ், சிஐடியுமாவட்டச் செயலாளர் தங்கமோகன், ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் ஐவின்ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தில் பெண்கள் உட்பட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/