பயங்கரவாதிகளுடனும் பிரிவினைவாதிகளுடனும் கொஞ்சிக் குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு புதுதில்லி, பிப். 23- இடதுசாரிகள் ஆளும் கேரளத்திலும், திரிபுராவிலும் சீர்குலைவு நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.திரிபுராவில் இனவெறி நடவடிக்கைகளில் பகிரங்கமாக இறங்கியுள்ள பாஜக, பயங்கரவாதக்குழுக்களுடனும், திரிணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டு இடதுமுன்னணி அரசை வீழ்த்துவதற்காக மிகப்பெரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.தில்லியில் பிடிஐ செய்தியாளர்களுடன் நடந்த உரையாடலின்போது சீத்தாராம் யெச்சூரி மேற்கண்டவாறு கூறினார்.குறிப்பாக திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கம் சீரிய முறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுபயங்கரவாதத்தையும் இனவாதப் பிரச்ச னையையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. அமைதிப் பூங்காவாக இடதுமுன்னணி ஆட்சியில் திரிபுரா மாற்றப்பட்டிருக்கிறது என குறிப்பிட்ட யெச்சூரி, ஆனால் சமீபகாலமாக இதைச் சீர்குலைப்பதற்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் முயற்சித்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.‘‘திரிபுராவில் பழங்குடியின மக்களுக்கும்,பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் இடையில், பல பத்தாண்டு காலமாக நல்லிண க்கம் நிலவிவருகிறது; அனைத்து துறைகளிலும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட்டு அமைதி பேணப்பட்டு வருகிறது; திரிபுராவில் நிலவுகிற இந்த அமைதி வடகிழக்கு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பிற மாநிலங்களில் உள்ளது போன்ற இனவாதச் சூழலை திரிபுராவில் உருவாக்குவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள்’’ என்றும் அவர் சாடினார்.திரிபுராவில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப் பினர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவியுள்ளனர். இதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சீத்தாராம் யெச்சூரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.திரிபுராவில் பிரிவினைவாத சக்திகளுக்கும்பயங்கரவாத சக்திகளுக்கும் பாஜகவும் திரிணாமுல்லும் பகிரங்கமாகவே ஆதரவு அளிக் கின்றன; இதன் நோக்கம் என்னவென்றால் வன்முறைகளை தூண்டிவிட்டு, அதன் பின்னர் திரிபுராவில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியை களைப்பது என்பதுதான் என யெச்சூரி குற்றம்சாட்டினார்.கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி யின் அரசை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் மதவெறியர்கள் இடைவிடாத வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனக்குறிப்பிட்ட யெச்சூரி, முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் வடக்கு கேரளத்தில் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு மதவெறியை தூண்டி வருகிறது; அதை தடுக்க முயற்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது கொடூரமான தாக்குதலை ஏவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.‘‘கேரளத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன். கேரளத்தில் எங்களது கட்சியும் அதன் தலைமையிலான அரசாங்கமும் அமைதி வழியையே விரும்புகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த முனைகிறது. நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களோடு பேசத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் பேசுவதற்கு மாறாக வன்முறைப் பாதையை மட்டுமே நீங்கள் தேர்வு செய்வீர்களானால் அதற்கான பதிலடி என்பது உங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்காது என்பதையும் உணருங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்தார். (பிடிஐ) http://epaper.theekkathir.org/