ஈஷாவின் சட்டவிரோதத்திற்கு உடந்தையானார் மோடி ******************************** கோயம்புத்தூர், பிப்.24- அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும், மக்கள் இயக்கங்களின் போராட்டங்களையும் மீறி, கள்ளச் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் நடைபெற்ற விழாவில் ஒய்யாரமாக பங்கேற்று, அனுமதி பெறாத சிலையை திறந்து வைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை காலில் போட்டு மிதித்தார் பிரதமர் நரேந்திரமோடி.கோயம்புத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் வெள்ளியன்று இந்தச் சட்டவிரோதம் பகிரங்கமாக அரங்கேறியது. அதை எதிர்த்து கோவை மாநகரில் இடதுசாரிகளும், இதர பல மக்கள் இயக்கங்களும் ஆவேசமிக்க போராட்டங் களை நடத்தினர்.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய காடுகளை அழித்தும், யானைகளின் வழித்தடங்களை மறித்தும் ஒரு லட்சம் சதுரடிக்கும் மேலாக முறைகேடான வகையில் ஈஷா யோகாமையம் கட்டிடங்களை எழுப்பியுள்ளது.கார்ப்பரேட் கள்ளச் சாமியாரான ஜக்கிவாசுதேவிற்கு சொந்தமான ஈஷாவின்சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங் களை தெரிவித்து வந்தனர். மேலும், இவ்வமைப்பின் அத்துமீறல்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமானவழக்குகளும் பதிவு செய்யப்பட் டுள்ளன.இந்த நிலையில் ஆதியோகி என்கிறபெயரில், வனத்தையொட்டி 112 அடிஉயரமுள்ள ஒரு சிலை ஈஷா மையத்தால்அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைஅமைப்பதற்கு அரசின் எந்த துறைகளிலும் முறையாக அனுமதி பெறவில்லை. இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், நகர்புற ஊரமைப்பு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தகைய நிலையில், சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ள ஆதியோகி சிலையை பிரதமர் மோடி ஈஷாவில்நடைபெற்ற பெரும் பொருட்செலவிலான விழாவில் பங்கேற்று, திறந்து வைத்தார். அவருடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர்ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களும் பலரும் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று பல்வேறு அமைப்பினர் கோவையில் கறுப்பு கொடியேந்தி ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம், ஆதித்தமிழர் பேரவை, சமூகநீதிக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், அனைத்திந்திய இளைஞர் பெருமன் றம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட ஜனநாயகஅமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் கறுப்புக்கொடி ஏந்தி பங்கேற்றனர்.இப்போராட்டத்தின்போது, சட்டவிரோதமாக செயல்பட்டு ஆன்மீகத் தின் பெயரில் வனத்தையும், வனவிலங்குகளையும் அழித்து ஒழிக்கும்கார்ப்பரேட் சாமியாரின் கைக்கூலியாக பிரதமர் மோடி சிலையை திறந்துவைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே மோடி உடனடியாக திரும்பிச் செல் என ஆவேச முழக்கங் களை எழுப்பினர். இதையடுத்து இந்தஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே. சிவஞானம், மாவட்டத் தலைவர் ஆறுச் சாமி, சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.ஆறுமுகம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். http://epaper.theekkathir.org/