Tuesday, February 28, 2017

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை, பிப். 28- வங்கிகளின் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்செவ்வாயன்று (பிப். 28) நடைபெற்றது. அதையொட்டி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ் தலைமை தாங்கினார்.மக்களுக்கு எதிராக வங்கி நடைமுறைகளை மாற்றாதே ஊழியர்களுக்கு எதிரானதொழிலாளர் சட்ட மாற்றத்தை அமல்படுத் ததே, நிரந்தர வேலைகளை வெளியில் கொடுப்பதை நிறுத்து என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பணிசுமைக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட செலவை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப் பட்டன.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டன. ஒரு சில வங்கிகளில் உயர் அதிகாரிகள் மட்டும்வேலைக்கு வந்திருந்தனர். கிளை மேலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் முற்றிலுமாக நின்றன. சென்னையில் இயங்கும்காசோலை பரிவர்த் தனை நிலையங்களில் சுமார் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் காசோலைகள் தேங்கியதாக போராட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்அகில இந்திய செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சாதாரண மக்களின் சேமிப்பு மூலமாகபெரும் வைப்புத் தொகையை பெரும்நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் கடனாகஅளிக்கின்றனர். ஆனால் இந்த பெரும் நிறுவனங்களும், முதலாளிகளும் கடன்களை திருப்பி செலுத்துவதில்லை. அரசாங்கமோ வராக்கடன்களை சலுகையாக அறிவித்துரத்து செய்கிறது. மேலும் வராக்கடன்கணக்குகளை அடிமாட்டு விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருகின்றன. இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.110 லட்சம் கோடி சேமிப்பு புழக்கத்தில்இருக்கும் வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது. அவற்றை மேலும்அரசுகண்காணிப்புடன் நடத்த வேண்டும். ஒப்பந்தஊழியர்களை நியமிப்பதை கைவிடவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கிஊழியர் சம்மேளன பொது செயலாளர் இ.அருணாசலம்,வங்கி ஊழியர் சங்க தலைவர்டி.தமிழரசு, மாநில செயலாளர் சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர் மு.சண்முகம்,அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுசெயலாளர் சீனிவாசன், அகில இந்தியவங்கி அதிகாரிகள் சம்மேளன பொது செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பேசினர். ஏராளமான அதிகாரிகளும்,ஊழியர்களும் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/