Saturday, February 25, 2017

பிப்.28ல் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்,ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்கள் ***********************சென்னை, பிப், 25- நெடுவாசல், காரைக்கால் பகுதிகளில் செயல்படுத்தவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் நலக்கூட்டியக்கம் பிப்.28ல் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தவுள்ளது. இதுதொடர்பாக கூட்டியக்கத் தின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஎம்), இரா.முத்தரசன்(சிபிஐ), தொல்.திருமாவளவன்(விசிக) ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு மற்றும்எண்ணெய் எடுக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இந்த முடிவு அப் பகுதி மக்களிடமும், தமிழகத்தின் இதர பகுதியில் உள்ளோரிடமும் கவலையையும், அச்சத்தையும் ஏற் படுத்தியுள்ளது. 6000 அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுத்திடும் மத்திய அரசின் திட்டத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு விடும். 5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும், சுற்றுச் சூழலையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அப்பகுதி மக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையான முறையில் திட்டத்திற்கு அனுமதி அளித் துள்ள மத்திய அரசை மக்கள் நலக்கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.எனவே, மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 28.2.2017 அன்று காலை 10 மணிஅளவில் ஆலங்குடியில் மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் தலைவர்கள் தோழர்கள் ஜி.ராமகிருஷ் ணன், ஆர்.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மக்கள் நலன் காக்கும் இந்த கண்டனஇயக்கத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் மக்கள் நலக்கூட்டு இயக்கத் தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழுஆலோசனைக் கூட்டம் ஆலங்குடியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட் டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி கலைமுரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் எம்.உடையப்பன், எஸ்.சுந்தர் ராஜன், ஏ.ஸ்ரீதர், சொர்ணகுமார், எல்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் 5 லட்சம் மக்களையும், விவசாயத்தையும், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அமல்படுத் தக்கூடாது என்றும் அப்பகுதி மக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் எதேச் சதிகார முறையில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை வன்மையாகக் கண்டித்தும்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மேலும், மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பில் பிப்.28ஆம் தேதி, இத்திட்டத்தை எதிர்த்து ஆலங்குடி கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது வெற்றிகரமாக்குவது என தீர்மானிக்கப்பட் டது. விழிப்புணர்வுப் பேரணி புதுக்கோட்டை, பிப்.25- எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிறன்று (26.2.2017) நடைபெற உள்ள உண்ணாவிரத போராட் டம் குறித்து நெடுவாசல் மற்றும்அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் தடுப்பு இயக்கத்தின் மூலம் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.நெடுவாசலில் தொடங்கி கருக்காகுறிச்சி, வெட்டன்விடுதி, ஆலங்குடி, புள்ளான்விடுதி, வடகாடு, மாங்காடு, ஆவணம், பேராவூரணி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட் டது.மேலும், நெடுவாசல் கடைவீதி மற்றம் எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் பெண்கள்காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வீடு வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். http://epaper.theekkathir.org/