அரசியல் பேசினால் தேசவிரோதியா? ***********************சென்னை, பிப். 28 - முற்போக்கு அரசியல் பேசினால், ஆட்சியாளர்களின் கொள்கைகளை விமர்சித்தால், உரிமைகளுக்காக போராடினால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதற்கு மாணவர் சங்க விழாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்திய மாணவர் சங்கத் தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் ‘அலை கடல் அடங் குமோ?’ - எனும் தலைப்பில் அரசியல், கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்ச்சி திங்களன்று (பிப்.27) சைதாப்பேட்டையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் பேசியது வருமாறு:சென்னை பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிக் கின்றனர். புதிய பாடப்பிரிவுகளை தொடங்க முடியாததாலும் மாணவர்கள் அல்லல்படுகின்றனர்.மாணவர்களுக்கு வழங்க 4 மாதங்களுக்கு முன்பே பள்ளி மைதானங்களில் சைக்கிள்கள் இறக்கப்பட்டன. அவற்றை வழங்காததால் வெயிலில் பாழாகிக் கொண்டிருக்கின்றன. 11 கல்லூரிகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப் படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் குடோன்களிலும், மரத்தடியிலும், திருமண மண்ட பங்களிலும் பயிலும் நிலை உள்ளது. இவற்றிற்கெதிராக மாணவர் சங்கம் போராடி வருகிறது.ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டை காக்கும் போராட் டத்திலும் மாணவர் சங்கம் ஈடுபடுகிறது. இப்போராட் டத்தில் பங்கேற்றதற்காக சங் கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் கையை போலீசார் உடைத்துள்ளனர். மதுரையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 15 பேரின் பெயரை குறிப்பிட்டு அடித்தனர். இப்படி தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத் தலைவர்கள் தாக்கப் பட்டனர். மாணவர்களின் போராட்டத்தை போர்க்களமாக மாற்றிய காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் தீ.சந்துரு தலைமை தாங்கினார். தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் பேரா.சுந்தரவள்ளி, மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் க.நிருபன், நிர்வாகிகள் ரா.ஜான்சிராணி, ரா.பாரதி, மாதர் சங்க பகுதி தலைவர் ம.சித்ரகலா, வாலிபர் சங்க பகுதி தலைவர் ஸ்ரீமதி, முன்னாள் வாலிபர் சங்கத் தலைவர்கள் கே.மணிகண்டன், சாலா உள்ளிட்டோர் பேசினர். http://epaper.theekkathir.org/