மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கிடுக! டாஸ்மாக் ஊழியர் மாநில மாநாடு கோரிக்கை ****************************** மதுரை, பிப்.28- டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு)வின் 4-வது மாநில மாநாடு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பிப்ரவரி 27 திங்களன்று பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியை துவக்கி வைத்தும் பொதுக்கூட்டத்திலும் சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான் பேசியதாவது: படித்து பட்டம் பெற்று, அனைத்து கல்வித்தகுதிகளும் கொண்ட 26 ஆயிரம் பணியாளர்கள் டாஸ்மாக்கில் பணிபுரிகிறார்கள். தற்போது அவர்களது வாழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மூடிய கடைகளில் வேலை செய்தோருக்கு அவர்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப்பணியை வழங்க வேண்டும்.தற்போது பணியிலுள்ள ஊழியர்களின் நிலைமை கொத்தடிமைகளைக் போன்று உள்ளது. இவர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதர சலுகைகளும் வழங்க வேண்டும்.தமிழக அரசுஇக்கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், தமிழகம் முழுவதிலுமுள்ள டாஸ்மாக்கடைகளை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். கல்வி, மின்சாரம், நெடுஞ்சாலை ஆகியவைகளை தனியாருக்கு கொடுத்து விட்டு, மதுபானக் கடைகளை மட்டும் அரசு நடத்துகிறது. இந்நடவடிக்கை சாராய மாபியாக்களை பாதுகாக்கவே. டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட அரசு வழங்கவில்லை. எனவே அரசு அவர்களுக்கு காலமுறை ஊதியம்,படிப்பிற்கு தகுந்த வேலை. ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறினார்.அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் தோழர்வி.பால்பாண்டி நினைவுத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் கே.பழனிவேலு தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஜி.சதீஸ், வேல்முருகன்,பொன்பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழு செயலாளர்வி.செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,மாநிலச் செயலாளர் இரா.தெய்வராஜ்,சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வம், துணைத் தலைவர் எஸ்.ஜெயபிரகாசன், ஜெ.ஆல்தொரை, மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சு.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சம்மேளன தலைவர் கே.பழனிவேலு பேசுகையில், டாஸ்மாக் நிறுவனம் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனம்.தற்போது இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.மூடப்படும் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு நிரந்தரமான அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். ஜி.சுகுமாறன் பேசியதாவது: டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ பாதுகாப்பை இதுவரைஅரசு வழங்கவில்லை. அரசுஊழியராக இருந்தால் அவர்களுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது. அதனடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் தினசரி பல அதிகாரிகள், ரவுடிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு கப்பம் கட்டவேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து ஊழியர்களை பாதுகாக்க சிஐடியு தொடர்ச்சியாக போராடி வருகிறது. குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. மத்திய,மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற முன்வருவது இல்லை. தொழிலாளிகளுக்கு தொகுப்பூதியம்,மதிப்பூதியம் வழக்கப்படுவது இல்லை. தற்போது பணியில் உள்ளவர்களுக்கு பென்சன் இல்லை. இப்படி மக்களும் விரோத செயல்களில் ஈடுபடும் கட்சிகளை மக்கள் தூக்கியெறிந்து, மக்களுக்காக போராடும் இடதுசாரி இயக்கங்களுடன் தொழிலாளர்களும், மக்களும் இணைய வேண்டும் என்றார்.மதுரை மாவட்டத் தலைவர் டி.சிவக்குமார் நன்றி கூறினர். http://epaper.theekkathir.org/