உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலின் 4ம்கட்ட வாக்குப்பதிவு வியாழனன்று நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பாலியா சதார் எனும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சைலேந்திர சிங்கை ஆதரித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.