நைனிடால் விராட் கோலிக்கு விளம்பர ஊதியம் வழங்கியதில் சர்ச்சை ***************** உத்தரகாண்ட் மாநில அரசின் விளம்பர படத்தில் நடித்ததற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்ட ஊதியம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்விளம்பரப் படத்தில் விராட் கோலி நடித்தார்.இதற்காக விராட் கோலிக்கு 47 லட்சத்து19 ஆயிரம் ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2013-ஆம்ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட கடும்வெள்ளத்தையொட்டி பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிவாரண நிதியில் இருந்து, விராட் கோலி க்கான ஊதியம் எடுக்கப்பட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது.