Tuesday, February 28, 2017

நாட்டின் பொருளாதாரத்திலும் நமது அன்றாட வாழ்விலும் தங்கம் வகிக்கும் பங்கு நாம் அறிந்த ஒன்றே.தங்கத்தின் மீது நமக்குள்ள பிரியம், பேராசையால் நமது பெயர்களைத் தங்கராஜ், தங்கமுத்து, தங்கமணி, தங்கப்பாண்டி என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.தங்கச்சிலை, தங்கத்தேர், தங்கக் கோபுரம், பொற்கோயில் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைகிறோம்.தங்கப்பதக்கம் வென்றவர்கள் என்கிறோம். ஐம்பது ஆண்டுகள் ஆனவுடன் பொன்விழா ஆண்டு என்கிறோம். ஏன்? இறைவனையும் கூட பொன்னன் மேனியனே எனப் போற்றிப் பாடுகிறோம். இப்படி எத்தனையோ விதம்!ஆனால், தங்கத்தைப் பற்றி தோழர் லெனின் சொன்னது இது:‘தங்கத்தின் மீதான பேராசையால் இதுவரை நடந்த யுத்தங்களும், உருண்டு ஓடிய தலைகளும், சிந்திய ரத்தமும் கொஞ்சநஞ்சமல்ல.எதிர்காலத்தில் ஒரு நாள் இந்த உலகம் முழுமையும் கம்யூனிச ஆட்சி வந்தே தீரும்.அப்போது - நமது முன்னோர்களின் பேராசையையும், மூடத்தனத்தையும் வருங்கால சந்ததியர்க்கு நினைவூட்டும் வகையில் உலகின் பல முக்கிய நகரங்களில் தங்கத்தால் கக்கூஸ்கள் கட்டி வைக்கப்படும்’’.