Monday, February 27, 2017

மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது நெடுவாசல் போராட்டக்களத்தில் 10 ஆயிரம் பேர் குவிந்தனர் ******************** புதுக்கோட்டை, பிப்.27- புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. திங்களன்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில்நெடுவாசல் கிராமத்தில் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 15-ம் தேதிகர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முன்னாள்எம்பியின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இந்த தகவலறிந்தது முதல் நாளுக்கு நாள் போராட்டக் களம் சூடுபிடித்து வருகிறது. பல்வேறு அரசியல்கட்சிப் பிரமுகர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், ஊடகத்துறையினர் என அனைத்துத்தரப்பினரும் நெடுவாசலை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் இதில் பம்மிப் பம்மி நடந்து கொண்ட தமிழக பாஜக தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு மாநிலத்தையோ, ஊரையோ பலிகொடுப்பதில் தவறில்லை என்ற அளவிற்குப் பேசி வருகின்றனர். தீவிரமடையும் கொந்தளிப்பு இது போராட்டக்காரர்கள் மத்தியில்பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர் ந்து திங்கள் கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இந்தப் போராட்டத் களத்தில் அனைவரின் ஒப்புதலுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நெடுவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பது, வீடுகள் தோறும் தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/