தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனாதையாக நிற்கின்றன. 140 ஆண்டுகளில் இல்லாதவறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, தீவிரமடையும் நகர்ப்புற, கிராமப்புற வேலையின்மை, 100 நாள் வேலைத்திட்டம் திட்டமிட்டு சீரழிக்கப்படும் கொடுமை, ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, நீட் தேர்வு உட்பட உயர்கல்வித்துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொலைகள். கொடுமைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானகொடூரத் தாக்குதல்கள், வன்கொடுமைகள், பழங்குடிமக்களின் நிலத்தை அபகரிப்பது போன்ற இந்த பிரச்சனைகளால் முற்றுகை யிடப்படுகிறது தமிழக மக்களின் வாழ்க்கை.