SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 1, 2017

சிபிஎம் பிரச்சார இயக்கம் இன்று துவங்குகிறது சென்னை, மார்ச் 1- ஊழலிலும், அதிகாரப் போட்டியிலும் மூழ்கித் திளைக்கும் ஆளும் அதிமுக, அதிகார வேட்கையில் மதிமயங்கும் திமுக, மதவெறிக்கு எதிரான தமிழகத் தில் புறவாசல் வழியாக அதிகாரத்தை ருசிக்க முயலும்பாஜக என தமிழக மக்களை சூறையாடி வரும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் விதத்தில் மார்ச் 2 முதல் 6 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் 9 மண்டலங்களாக மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன்எம்பி., பி.சம்பத், அ.சவுந்தரராசன், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மார்ச் 5 சென்னையில் பிருந்தாகாரத், மார்ச் 6 மதுரையில் பிரகாஷ் காரத் ஆகிய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.