SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

விரைந்து செயல்படுமா அரசு? **********************************தலித் மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும் என்று எஸ்.சி./எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் கூறுகிறது. உண்மை நடப்பு என்னவென்றால் பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவே கூட காவல்துறை தயாராக இல்லை என்பதுதான். தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான குற்றங்கள் குறித்துஇச்சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதென்பதும் தொடர்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கு, நெடும் போராட்டங்களின் பலனாகக் கிடைத்த சட்டப் பாதுகாப்புகள் இருந்தாலும் அவை பல ஆண்டுகளாக சட்டப்புத்தகத்தில் மட்டுமே இருக்கின்றன.முதலில் வழக்குப்பதிவு செய்யவே ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. பின்னர் விசாரணையை காவல்துறையில் ஊடுருவியுள்ள ஆதிக்க சக்திகள் நீர்த்துப்போகச் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இக்கட்டங்களைத் தாண்டினாலும் நீதிமன்றத்தில் குறித்தகாலத்திற்குள் விசாரணை முடிவடைவதில்லை. இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்கவேண்டும் என்று சட்டம் சொன்னாலும் அதைப் பல நீதிபதிகள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இதே நீதிமன்றங்கள் அதிகார பலமும் பொருளாதார செல்வாக்கும் உள்ளவர்களுக்கு பிணை வழங்க விடுமுறை காலங்களில் கூடகூடுவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். வன்கொடுமை வழக்குகளைப் பொறுத்தவரையில் விசாரணைக் கட்டத்தைத் தாண்டவேபல ஆண்டுகள் ஆவதால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஏதுவாகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 15(ஏ)(11) தெளிவாகக் கூறுகிறது.இதில் எதையுமே காவல்துறை கண்டுகொள்வதில்லை. மேலும் இதே சட்டத்தின் பிரிவு 12 (4)மற்றும் பிரிவு 15 (11) ஆகியவற்றின் கீழ் உரியஇழப்பீடும் வழங்கப்படவேண்டும். சட்ட ரீதியிலான இந்தப் பாதுகாப்பும் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்படாத நிலைமைதான் இன்றளவும் நீடிக்கிறது. சாதியக் கட்டமைப்பில் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்ட தலித், பழங்குடியின மக்கள் ஏற்கெனவே பல்வேறு வகையிலான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்கொண்டுள்ளனர். தாக்குதல்களில் காயம்பட்டது போதாதென்று, வழக்குவிசாரணைகள் இழுத்தடிப்பு, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மறுப்பது போன்றவை பாதிக்கப்பட்டோரை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகின்றன. எனவே இது போன்ற வழக்குகளில் தவறிழைக்கும் காவல்துறை அதிகாரிகள்மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் மற்ற அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வழிஏற்படும். அதற்கும் இந்தச் சட்டத்திலேயே விதிகள் உள்ளன. இத்தகைய வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்துள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை அரசும் காவல்துறையும் உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கிலாவது விரைவான விசாரணை நடைபெறுமா? தீர்ப்பு வருவது ஒரு புறமிருக்க மாநில அரசும் இது போன்ற வழக்குகளை விரைந்து முடிக்க, சட்டமே வலியுறுத்துவது போலப் போதிய விரைவு நீதிமன்றங்களை அமைப்பதில் விரைவு காட்டட்டும். THEEKATHIR