SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

ரூ. 70,000 கோடி கறுப்புப் பணத்தை கண்டுபிடித்துவிட்டோம்! உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி அரிஜித் பசாயத் குழு சொல்கிறது கட்டாக், மார்ச் 3 - பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பின்பு, இதுவரை ரூ. 70 ஆயிரம் கோடிஅளவிலான கறுப்புப் பணம் கண்டுபிடிக் கப்பட்டு உள்ளதாக- உச்சநீதிமன்றம் நிய மித்த சிறப்பு விசாரணைக்குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான அரிஜித் பசாயத் தெரிவித்துள்ளார்.இதில், இந்தியர்கள் அயல்நாடுகளில் பதுக்கியுள்ள 16 ஆயிரம் கோடி ரூபாயும் அடங்கும் என்றும் பசாயத் கூறியுள்ளார்.உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிஏ.பி. ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத் தலைவராகவும் கொண்ட மொத்தம்13 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து அவற்றை மீட்பதற்கான பரிந்துரைகளை அளிக்கும் வகையில், இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தங்களின் விசாரணை தொடர்பான அறிக்கைகளை 5 கட்டங்களாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 6-வது கட்ட விசாரணை அறிக்கையை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய உள்ளது.இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களைக் கையாளும் பல்வேறு அரசு அதிகாரிகளை- சிறப்பு விசாரணைக் குழுவின் உதவித்தலைவரான நீதிபதி அரிஜித் பசாயத் சந்தித்துப் பேசினார். பின்னர் பசாயத் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை 70 ஆயிரம் கோடி ரூபாய்அளவிற்கான கறுப்புப் பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.கறுப்புப் பண உருவாக்கத்தை, அதன் துவக்கத்திலேயே தடுப்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு பல்வேறு பரிந்துரைகளை, உச்சநீதிமன்றத்திற்கு அளித்துள்ள இடைக்கால அறிக்கைகளில் தந்துள்ளதாக கூறிய அவர், தங்களது பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.ரூ. 3 லட்சத்திற்கும் கூடுதலான ரொக்கப் பரிவர்த்தனை சட்ட விரோதம், தண்டனைக்குரிய குற்றம் என்று மத்தியஅரசு அறிவித்தது கூட சிறப்பு விசாரணைக்குழுவின் பரிந்துரை அடிப்படை யில்தான் என்று பசாயத் சுட்டிக்காட்டினார்.கையில் ரொக்கமாக ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் வைத்திருந்தால் அது கணக்கில் காட்டப்படாத வருவாயாக கருதப்பட வேண்டும் என்ற விசாரணைக் குழுவின் மற்றொரு பரிந்துரை, மத்திய அரசின் தீவிரமான ஆய்வில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒடிசா மாநில அதிகாரிகளுடனான சந்திப்பு குறித்து விவரித்த அரிஜித் பசாயத், ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றங்கள் மற்றும் கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு விஷயத்தில், விசாரணை அமைப்புகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காகவே தான் கட்டாக் வந்ததாக கூறினார்.குறிப்பாக, தனியார் கல்வி நிறு வனங்கள், நகைக் கடைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்களையே கடவுள்என்று அழைத்துக் கொள்ளும் சாமியார்கள், மாஃபியா டான்கள் ஆகியோர் செய்யும்பல்வேறு நிதி முறைகேடுகள், தவறுகள்குறித்து மாநில குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து அறிந்துள்ள விவரங்களை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.ரூ. 70 ஆயிரம் கோடிக்கு கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அரிஜித் பசாயத் கூறியிருந்தாலும், திட்டவட்டமான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. ரூ. 70 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் பசாயத், கணக்கில் வராத அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் யார்? அல்லது எந்தெந்த முறையில் கறுப்புப் பணம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது என்பன போன்ற விவரங்களை எதையும் தெரிவிக்கவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, பசாயத் முன்பு கூறியபடி ‘ஒருவர் ரூ. 15 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வைத்திருக்கும் பணமெல்லாம் கறுப்புப் பணம் என்ற பெயரில் கணக்கிடப்பட்டு- அந்த பணத்தைத்தான் ரூ. 70 ஆயிரம் கோடிக்கு கண்டுபிடித்து இருக்கிறோம் என்று கணக்கு காட்டுகிறார்களோ?’ என்ற சந்தேகம் எழுகிறது.