SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 4, 2017

THEEKATHIR: மினிமம் பேலன்ஸ் ரூ. 5 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மீது வங்கிகளின் தாக்குதல் தீவிரமடைகிறது ********************மும்பை, மார்ச் 4 - பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ)வங்கிக் கணக்கில், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்; இல்லையேல் ஏப்ரல் 1 முதல் அபராதம்விதிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், மாதத்துக்கு 4முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்த பட்சம் 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில நாட் களுக்கு முன்பு தனியார் வங்கிகள் அறி வித்தன. அதனைத் தொடர்ந்து அரசுத்துறைவங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வும், பணப் பரிவர்த்தனைக்கு ரூ. 50 கட்டணம் விதித்தது. தற்போது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 5 ஆயிரம்வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென்று அறிவித்தார். கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்கவே இந்த நட வடிக்கை என்று மோடி அப்போது கூறினார். முன்கூட்டியே புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வங்கிகளில் இருப்புக் வைத்துக் கொள்ளாமல், அவசர கோலத்தில் வெளியிடப்பட்ட மோடியின் அறிவிப்பால் மக்கள் பெரும் அவதியைச் சந்தித்தனர். கையிலிருந்த பழைய ரூபாய் நோட்டுக்களையும் மாற்ற முடியாமல், அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பணமின்றித் தவித்தனர். மோடியோ, இந்த அலைக்கழிப்பு எல்லாம் 50 நாட்களுக்குத்தான் என்றும், அதுவரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் கூறினார். அவர் சொன்ன 50 நாட்களும் முடிந்தது. ஆனால், பிரச்சனை தீரவில்லை. இதையொட்டி பேட்டி அளித்த மோடி,இனிமேல் யாரும் பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருக்கக் கூடாது;அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்த னைக்கு மாற வேண்டும்; இதற்காகவே ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தேன் என்று புதிய ரகசி யத்தையும் வெளியிட்டார்.அப்போதிருந்து, நாட்டில் ரொக்கப் பணப் பரிமாற்றத்தை குறைத்து டிஜி ட்டல் பரிமாற்றத்தை கொண்டு வர- அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு தாக்குதல்களை மக்கள் மீது மத்திய பாஜக அரசு தொடுத்து வரு கிறது.ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்வதற்கு மத்திய அரசின்பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தடை விதித்தார். தனிநபர்ஒருவர், அதிகபட்சமாக ரூ. 15 லட்சத்துக்கு மேல் கையில் வைத்திருக்கக்கூடாது என்று சிறப்பு விசாரணை க்குழு அளித்த பரிந்துரையை செயல் படுத்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில், வங்கிப் பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கை யாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 150 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று தனியார் வங்கிகள் அறிவித்தன. அரசுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் இதில் சேர்ந்து கொண்டது. அது பணப் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியது. தற்போது, பெருநகரங்களில் வசிப்பவர்கள், தங்களின் சேமிப்புக் கணக்கு களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை யாக ரூ. 5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதேபோல நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், கிரா மப்புறங்களில் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாயும் வைத்திருக்க வேண்டும்.வங்கி அறிவித்துள்ள இந்த குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் குறைவாக டெபாசிட் வைத்திருந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப் படும் என்று கூறியுள்ள எஸ்பிஐ வங்கி, குறைந்த பட்ச இருப்புத் தொகையை விட எவ்வளவு தொகை வங்கிக் கணக்கில் குறைவாக உள்ளதோ, அதன்அடிப்படையில் அபராத தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.எடுத்துக்காட்டாக, குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 5000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருப்பவர்கள், அந்த தொகைக்கு குறைவாக இருப்புவைத்திருக்கும் பட்சத்தில்- அதாவதுஇருப்புத்தொகையானது 75 சதவிகி தம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாயும், 50 சதவிகி தத்திற்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.இதேபோல குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ. 3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருப்பவர்கள், அதற்குகுறைவாக இருப்புத் தொகை வைத்திருந்தால், 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையும், ரூ. 2 ஆயிரம் இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டவர்கள் ரூ. 25 முதல் 75 ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும். 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டவர்கள், அதைவிடக் குறைவாக கணக்கில் இருப்பு வைத்திரு ந்தால் ரூ. 20 முதல் 50 ரூபாய் வரை அபராதமாக செலுத்த வேண்டும். இவை தவிர சேவை வரியும் உள்ள தாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.ஏடிஎம். இயந்திரங்களில் 3 முறைக்குமேல் பணம் எடுத்தால் 50 முதல் 150ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப் படும் என தனியார் வங்கிகள் கூறி வரும் நிலையில், ஏடிஎம் இயந்திரங்களில் மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம்எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித் துள்ளது. எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://epaper.theekkathir.org/