SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 1, 2017

‘தமிழகத்தின் விரோதி பாஜக’ நெடுவாசல் போராட்டத்தில் கடையடைப்பு; கருப்புக் கொடி *********************புதுக்கோட்டை, மார்ச்.1- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரானபோராட்டம் நெடுவாசலைத் தாண்டி கடை யடைப்பு, கறுப்புக்கொடி என மாவட்டம் தழுவிய போராட்டமாக வெடித்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கியது. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது. 14-வது நாளாக நடைபெற்ற போராட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களுமாக பல்லாயிரக்கணக்கில் திரண்டு தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர். இதனால், போராட்ட மைதானம் ஆட்கள் நிற்பதற்கும், வாகனங் களை நிறுத்துவதற்கும் இடமின்றி நெடுவாசல் கிராமமே ஸ்தம்பித்தது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள்கள், இயற்கை ஆர்வலர்கள் என காலைமுதல் மாலைவரை நெடுவாசலை நோக்கி சாரைசாரையாகத் திரண்டுவந்து புதன்கிழமை யன்றும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இதில் நடிகர் மன்சூர்அலிகான், டிராபிக் ராமசாமி, பச்சைத் தமிழகம் நிறுவனர் சுப.உதயகுமார், பேரறிவாள னின் தாயார் அற்புதத்தம்மாள், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டை மான், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் அடங்குவர். கடையடைப்புப் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி வர்த்தகர் கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டு நெடுவாசலுக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டக்காரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து தப்பாட்டம், கிராமியப்பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. நீதிமன்றம் புறக்கணிப்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர் உள்ளிட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும் புதன்கிழமையன்று நீதி மன்றத்தை புறக்கணித்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித் தனர். மேலும், ஏராளமான வழங்கறிஞர்கள் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டம் 15-வது நாளாக வியாழ னன்று தொடருமா? அல்லது தமிழக அரசின்வேண்டுகோளை ஏற்று போராட்டம் கைவிடப்படுமா என்பது வியாழனன்று தெரியவரும்.http://epaper.theekkathir.org/