SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 1, 2017

‘தொழிலாளர்களின் பணத்தைச் செலவு செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை’ சென்னை,மார்ச் 1- போக்குவரத்து தொழி லாளர்களின் முன்னுரிமை கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு, பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஏன் வேலை நிறுத்தம் என்பதை விளக்கியும் தொமுச,சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங் களின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்புபுதனன்று (மார்ச் 1)பொதுக்கூட்டம் நடை பெற்றது.போக்குவரத்துத் துறை யில் 1.9.2016ல் இருந்து புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறாத தால் தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைக்களை வலியுறுத்தியும், உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்என்றும் இல்லையென்றால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவ தாகவும் கடந்த பிப்ரவரி மாதம் நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கினார்கள். இந்நிலையில் வரும் 7ம் தேதி தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது.இதுகுறித்து தொழிற் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது: போக்குவரத்துக் கழகங்கள் அரசின் கொள்கைப்படி செயல்படுவதால் கழகங்களின் இயக்கச் செலவுக்கும், வருவாய்க்கு மிடையே ஏற்படும் இழப்பி ற்கும் அரசின் கொள்கையே காரணமாகும். தொழி லாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை களை செலவு செய்ய அரசுக்கு எந்தவொரு அதிகார முமில்லை. சொசைட்டி, பி.எப். ஓய்வூதியம் என பல்வேறு வகைகளில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 5000 கோடி ரூபாயைஅரசு எடுத்து கழகங்களின் இயக்கச் செலவிற்கு பயன்படுத்தி விட்டு, தற்போது அரசு பணம் வழங்க இயலாது என்று கூறுகிறது. எனவே தொழி லாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை அந்தந்த துறைகளுக்கு வழங்க முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்துக் கழக வரவுக்கும், செலவிற்கும் இடையிலான வித்தியாச தொகையை அரசு மாதா மாதம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சுமார் 65 ஆயிரம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும், மாதாமாதம் ஓய்வூதியம் வழங்குவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில முன்னுரிமை கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு, ஒப்பந்தபேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இல்லையென் றால் அரசும், போக்கு வரத்துக் கழகங்களும் மீண் டும் பணம் இல்லை எனக்கூறுவார்கள்.எனவே கோரிக்கைகளை ஏற்கா மல் புதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தொமுச.பொருளாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் தொமுச பொதுச்செய லாளர் மு.சண்முகம், அர சாங்க போக்குவரத்து ஊழி யர் சம்மேளன (சிஐடியு) மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், அரசு மாநகர போக்குவரத்து ஊழியர்சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பல் வேறு சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்கள். இதில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/