SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 1, 2017

அமெரிக்காவில் அதிகரித்து வரும் வெறுப்புணர்வு குற்ற நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் *********************** புதுதில்லி, மார்ச் 1- அமெரிக்காவில் இந்திய இளைஞர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். மற்றொருவரான அவரது நண்பரும்துப்பாக்கிச்சூட்டில் படுகாய மடைந்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் குற்றங்களும் அதிகரித்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் கனாஸ் மாகாணம் ஒலாத்தேவில் இந்திய இளைஞரான ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப் பட்டார். அவரது நண்பரான அலோக மாதசாணியும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார். அவர்கள் இருவரும் சட்டப்பூர்வமான முறையில் குடியிருந்து வருவ தோடு அங்கு பணியாற்றி வந்தனர்.கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் பெற்றோருக்கும் அவரது குடும்பத்தி னருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நிர்வாக ரீதியாக பொறுப்பேற்றதற்கு பிறகு அமெரிக்காவில் வசிக்கும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினருக்கு எதிரானவெறுப்பும் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கே எந்த வாய்ப்புகளையும் வெளி நாட்டினர் பகிர்ந்துகொள்ள அனு மதிக்கமாட்டோம் என தற்போதைய டிரம்ப் அரசு கருதுகிறது.இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களிடம் பெரும் அச்சத்தைஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசாங்கம் உடனடியாக இப்பிரச்சனை யில் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தப்பட வேண்டும். மீண்டும் இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடைபெறாத சூழலை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தி யுள்ளது. http://epaper.theekkathir.org/