This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, March 1, 2017
இனவெறியின் விளைவு ****************************** அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்தியமென்பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோட்லாஅமெரிக்க இனவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை அதிகாரியாகஇருந்த ஆதன்புரின்டன் என்ற இனவெறியன்அந்நியனே என் நாட்டை விட்டு வெளியே போ என கூச்சலிட்டவாறு சுட்டு கொன்றிருக்கிறான்.இந்த இனவெறிச்செயல் இந்தியர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு மக்களிடையே ஒருவிதஅச்சம் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இந்த இனவெறி படுகொலையில் டிரம்பிற்கு பங்கிருக்கிறது என ஹிலாரி கிளிண்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன்பின்பும் தனது இனவெறி பேச்சை டிரம்ப் நிறுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக குடியேற்றவாசிகள், அகதிகள்,இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பையே உமிழ்ந்து வருகிறார். டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற உடன் செய்தகாரியம் என்ன? இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைசேர்ந்த மக்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார். இதன் மூலம் 7 நாடுகளை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பே ஆவார். இந்த நிலையில்தான் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.சீனிவாஸ்குச்சிபோட்லா சுட்டு கொல்லப்பட்டு ஒருவாரம் கடந்தநிலையிலும் கருத்து தெரிவிக்காமல் ட்ரம்ப் இருந்துவந்தார். குழந்தையைகிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட கதையாக தற்போது நாடாளுமன்றகூட்டுக்குழு கூட்டத்தில் சீனிவாஸ் கொலைக்கு கண்டனம்தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் அந்தகொலையாளி ஆடம்புரின்டன் நான் ஈரானியர் என நினைத்துசுட்டு கொன்றேன் என வாக்குமூலம் அளித்திருக்கிறான். ஈரானியர் என்றால்சுட்டு கொலை செய்யலாம் என்ற மனநிலையைஉருவாக்கியிருப்பதற்கு டிரம்பின் பேச்சுதானே காரணம்.‘‘வெறுப்பு குற்றங்களை நிறுத்த அமெரிக்க அரசு என்ன செய்யப்போகிறது..? எனக்கு பதில் வேண்டும். சாகடிக்கப்பட்ட என் கணவருக்காக மட்டுமல்ல, பல்வேறு இனங்களைச் சேர்ந்த,தன்அன்புக்குரியவோரை இழந்த ஒவ்வொருவருக்காகவும் கேட்கிறேன்`` என்கிறார். இனவெறிக்கு பலியான சீனிவாசஸின் மனைவி சுனன்யா. அமெரிக்கா என்பதே ஒரு குடியேற்றநாடுஎன்பதை டிரம்பிற்கு யார் புரிய வைப்பது. எந்த கணக்கிலும் சேர்க்க முடியாத ஒரு நபரைநாங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருப்பதற்கு வெட்கப்படுகிறோம் என பெரும்பகுதி அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த டிரம்பைதான் சங்பரிவாரங்கள்தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. டிரம்ப் வெற்றி பெற்ற போது இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் இனிப்பு வழங்கின. ஒரு இந்தியர் அமெரிக்க இனவெறியனால் சுட்டு கொல்லப்பட்டிப்பதற்கு இதுவரை மோடி நேரடியாக கண்டிக்கவில்லை. இதுதான் பாஜகவின் தேசபக்தி. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR