This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 2, 2017
தாமிரபரணிக்கு அநீதி மூன்றாம் உலகப்போரே தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்கிற அளவுக்கு எச்சரிக்கைவிடுக்கப்படுகிறது. தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாத மாவட்டமே இல்லைஎன்கிற அளவுக்கு எங்கும் வறட்சி தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம்இருக்கிற நீர்வளமும் பெரும் தனியார் நிறுவனங்கள் தங்களது அடங்காத லாபத் தாகத்திற்காக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஒரு தனியார் நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு அளித்த அனுமதியிலிருந்து விவசாய நிலத்தையும் நீர் வளத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றிலிருந்து பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கான விவசாயத்திற்கும் குடிநீருக்குமான தண்ணீர் தாமிரபரணியிலிருந்து எடுக்கப்படுகிறது. இரண்டு பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரையும் தாமிரபரணியிலிருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டது. 1,000 லிட்டருக்கு வெறும் ரூ.37.50 விலை கொடுத்து, நாளொன்றுக்கு ஒவ்வொரு நிறுவனமும் 15 லட்சம் லிட்டர் வரையில் நீர் எடுத்துக்கொள்ள தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) அனுமதியளித்தது. விவசாயத்தை சீர்குலைக்கும், குடிநீர் வளத்தை அழித்துவிடும் என்பதால் தாமிரபரணி மடி சார்ந்த மக்கள் அந்தப்பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படுவதை எதிர்த்துக் களமிறங்கினர். தாமிரபரணியிலிருந்து அந்த நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.கடந்த நவம்பரில், இந்நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. நிலையான தடை வரும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வியாழனன்று (மார்ச் 2) நீதிமன்றம், அந்த இடைக்காலத் தடையை நீக்கி, இருநிறுவனங்களும் நீர் எடுப்பதற்கு அனுமதியளித்தததால் மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போயிருக்கிறது. நிறுவனங்களின் நிர்வாகங்கள், ஆற்றின் உபரி நீரையே தாங்கள் பயன்படுத்துவதாக விளக்கமளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது விமர்சனத்திற்குரியதேயாகும். தமிழகம் முழுவதும் வணிகர்கள், தங்களது வர்த்தக நலனைப் பொருட்படுத்தாமல், கோக்,பெப்சி நிறுவனங்களின் பானங்களை இனிவிற்பனை செய்வதில்லை என்று அறிவித்து,அதைச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, இந்த அந்நிய நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிரான முழக்கங்களும் எழுந்தன. மக்களின்இப்படிப்பட்ட உணர்வுகளை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறியிருக்கிறது. இத்தீர்ப்பால் அதிருப்தியும் ஆவேசமும் அடைந்துள்ள மக்கள் மறுபடி நெடும் போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர். நெடுவாசல் போராட்டம் போல் இதற்கும் தமிழகம் முழுக்கஆதரவுக் கரங்கள் உயரும் என்பது நிச்சயம்என்ற நிலையில் கேள்வி, தமிழக அரசை நோக்கித் திரும்புகிறது. அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கான அனுமதியை விலக்கிக்கொண்டுமக்கள் பக்கம் நிற்கப்போகிறதா, அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக நின்றுமக்களைக் கைவிடப்போகிறதா? http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
