This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Friday, March 3, 2017
சரக்கு வியாபாரமும் அதிமுக - திமுக புரிந்துணர்வு ஒப்பந்தமும் ******************** ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே பெரிய மார்க்கெட்டாகும். இந்த மார்க்கெட்டில் இருந்து கூட காய்கறிகள் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயம் பொய்த்துப் போயுள்ளது; மக்காச்சோளம் கருகிப் போயுள்ளது. காய்கறி வரத்து குறைந்து உள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த காய்கறி சந்தை பரபரப்பின்றி காணப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒரு விவசாயி என்னிடம் கூறும் போது, தான் தனது மாட்டை விற்று கன்றுக்குட்டியை பராமரிப்பதாக கூறுகிறார். கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள். ஓட்டன்சத்திரம் பகுதியில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஏக்கர் சாகுபடி செய்த ஒரு விவசாயி தனது நிலத்தில் தான் பயிரிட்ட பயிரை பார்த்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமாகட்டும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியாகட்டும் இந்த விவசாயிகள் தற்கொலை குறித்து எந்த கவலையும் அடைந்ததாகத் தெரியவில்லை. அவர்களது ஒரே கவலை எப்படியாவது கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதும், ஆட்சியைக் கைப்பற்றுவதும் தான். எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய ஆளுங்கட்சியினரை சசிகலா சிறையில் இருந்து கொண்டு ரிமோட்கன்ட்ரோல் மூலம் இயக்குவது போல் இயக்கிக்கொண்டுள்ளார். இப்போது சசிகலா ஜெயிலரிடம் ஒரு மனுக்கொடுத்துள்ளாராம். தனது அறைக்கு ஒரு ஏர்கூலர் வசதியும் தனக்கு உதவியாளராக 2 பேரையும் கேட்டுள்ளாராம். தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலைகள் பற்றியோ, நிலவும் வறட்சி பற்றியோ தனது கட்சி தலைவர்களிடம் சசிகலா கேட்கவில்லை. கவலைப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டை திமுக, அதிமுக கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு ஆட்சி காலங்களிலும் கிரானைட் கொள்ளை, தாதுமணல், மணல் கொள்ளை நடந்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கிரானைட் கொள்ளையில் ரூ.1,06,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த ஊழல் பணத்தில் ஒரு 10 ஆயிரம் கோடியை கொடுத்தால் கூட தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்த்திருக்க முடியும். திண்டுக்கல் மாவட்ட பிரச்சாரப் பயணத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து... திமுகவை அண்ணா தொடங்கினார். அக்கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதால் அதிமுக என்ற கட்சியை துவக்கினார். இப்போது கணக்கு காட்ட முடியாமல் உள்ளே சென்றவர் சசிகலா. சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவும், திமுகவும் மாறி மாறி டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றனர். ஆனால் தற்போது, சரியாக விற்பனை நடைபெறாத கடைகளை மட்டுமே தமிழக அரசு மூடுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், திமுகவினரின் சாராய ஆலையில் சரக்கு வாங்குவதும், திமுக ஆட்சிக்கு வந்தால் சசிகலாவுக்கு சொந்தமான சாராய ஆலையில் இருந்து சரக்கு வாங்குவதும் தான் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். இரு கட்சிகளும் தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திக்க வரும். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மக்களை சந்திக்கும். நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுத்து அப்பகுதியின் வளத்தை அழிக்க பாஜக முடிவு செய்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. தாமிரபரணி குடிநீர் தான், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்ட மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தை நடத்தினர். இன்று, நமது நாட்டு குடிநீரை வெளி நாட்டுக் கம்பெனி எடுப்பதற்கு நமது நீதிமன்றமே அனுமதியளிக்கிறது. எனவே, இதை எதிர்த்து தண்ணீர் சத்தியாகிரகம் எனும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழக மக்கள் நடத்த வேண்டும். விருதநகர் மாவட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆற்றிய உரையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் பட்டாசுத் தொழிலாளிகள் வேலையின்றி உள்ளனர். ஆலையை திறக்க தமிழக அரசோ, அமைச்சர்களோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம், வருமான வரித்துறையினரால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியுடன் திருப்பதி கோவிலின் முன்பு மொட்டையடித்தபடி போஸ் கொடுத்தவர்தான். பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நேர்த்திக் கடன் செலுத்தி வந்தார். கனிமக் கொள்ளை விசாரணை அறிக்கை பற்றி எதிர்க்கட்சியான திமுக சட்டசபையில் வாய் திறக்காதது ஏன்? விருதுநகர் மாவட்ட பிரச்சாரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆற்றிய உரையிலிருந்து... THEEKATHIR
Labels:
TAMILNADU,
THEEKATHIR
