This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Friday, March 3, 2017
அயராத போர்வீரன் ******************** ‘‘பாரதி புத்தகாலயம் அண்மையில் வெளியிட்டுள்ள ‘வீரம் விளைந்தது’ (இளையோர் பதிப்பு) நாவலின் அறிமுக உரை’’ எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களை வசீகரித்து, தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி எழுதிய ‘வீரம் விளைந்தது (ழடிற வாந ளவநநட றயள கூநஅயீநசநன) நாவல், வாசகர்களுக்கு வீரத்தையும், மேம்பட்ட வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய அவசியத்தையும் அது உணர்த்தி வருகிறது. உலகின் பல்வேறு மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாடகமாகவும் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நாவலின் நாயகன் பாவெல் கர்ச்சாகின் என்ற இளைஞன், ஒரு சகாப்தம் படைத்தான், அவன் வேறு யாருமல்ல; நாவலை; எழுதிய ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வாழ்க்கையும் பணிகளுமே அவனுடையதாகச் சொல்லப்பட்டுள்ளன.உயர்ந்த லட்சியங்களுக்காக மக்கள் போராடிய, வீரதரச் செயல்கள் புரிந்த காலம் அது. 1917ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் (போல்ஷ்விக்) வழிநடத்தப்பட்ட தொழிலாளர்களும் உழவர்களும் புரட்சி நடத்தி, அந்நாட்டு மன்னர் ஜாரை பதவியிலிருந்து அகற்றினர். அதற்குப் பிறகு நிலவுடைமையாளர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தையும் அவர்கள் கைப்பற்றினர். புதிய அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. தொழிலாளர்களின் தொழிற்சங்க அமைப்புகளான ‘சோவியத்’துகளே ஆட்சித் தலைமையை நிர்ணயித்தன. எல்லோரும் சமமாகக் கருதப்பட்டார்கள். அதுவரை நடைபெற்றுவந்த சுரண்டல் ஒழிக்கப்பட்டது.ரஷ்யாவின் முன்னாள் ஆட்சியாளர்கள், முதலாளிகளால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. புரட்சிக்கு எதிராக அவர்கள் ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தார்கள். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. ரஷ்யாவின் முந்தைய ராணுவ அதிகாரிகளில் ஒரு பகுதியினரும் பழைய முடியாட்சிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய மக்களாட்சிக்கு எதிராக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.இப்படி புரட்சியின் மூலம் புதிய சமூகம் உருவாவதை எதிர்த்த பல்வேறு தரப்பினரும் ரஷ்ய குடிமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட ஆரம்பித்தனர். பல முதலாளித்துவ நாடுகள், ரஷ்ய மக்களாட்சிக்கு எதிராகத் தலையிட்டன. இந்த நிலையில் புரட்சியின் பலனாகக் கிடைத்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிலாளர்களும் அமைத்த படையே செஞ்சேனை. 1918ல் இந்தப் படை செயல்பட ஆரம்பித்தது.நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி 16 வயதில் சிறுவனாக இருந்தபோதே செஞ்சேனையில் இணைந்துவிட்டார். போரில் பல முறை அவர் காயமடைந்தார். ஆனால், எதற்கும் அசராமல் போர்க்களத்துக்கு அவர் திரும்பினார். தலையில் ஏற்பட்ட மோசமான காயத்துக்குப் பிறகு, ராணுவ வாழ்க்கையை அவர் வலிந்து துறக்க வேண்டியிருந்தது.அதன்பிறகு கம்சமோல் எனப்படும் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தின் நகரக் குழுவில் அவர் செயல்பட்டார். அந்த நேரத்தில் போரால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து ரஷ்யா மீண்டு கொண்டிருந்தது. மக்களிடையே துளிர்த்த புதிய உறவால், புதியதொரு வாழ்க்கை உருப்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த மாபெரும் புதிய தொடக்கங்கள் அனைத்திலும் ஒஸ்திரோவ்ஸ்கி போன்ற இளைஞர்கள் பெரும் பங்கை ஆற்றினர்.பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியை பயங்கரப் பின்விளைவு ஒன்று தாக்கியது. போரில் பல முறை படுகாயமடைந்ததால், அவருடைய கை- கால்கள் செயலிழந்தன. பார்வையும் பறிபோனது. 24 வயதில் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அவரைப் பொறுத்தவரை மக்களுக்குப் பயனுள்ள வகையில் வாழ்வதுதான் வாழ்க்கை.அவருடைய உடல் இருந்த நிலைமையில், அவருக்கு எஞ்சியிருந்த ஒரே ஆயுதம் எழுத்து மட்டுமே. அந்த நிலையில்தான், தன் சுயவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவலை அவர் எழுத ஆரம்பித்தார். மக்களுக்கான புரட்சி என்ற போராட்டத்தின் பாதைக்கு இளைஞர்கள் எப்படித் திரும்புகிறார்கள் என்பதை அந்த நாவல் எடுத்துரைத்தது.1932ஆம் ஆண்டில் ‘வீரம் விளைந்தது’ நாவல் ரஷ்ய மொழியில் வெளியானது. உடனே லட்சக்கணக்கானோரின் விருப்பத்துக்குரிய புத்தகமாக அது மாறியது. ‘வீரம் விளைந்தது’ நாவலை எழுதி முடித்த பிறகு, ‘புயலின் மூலம் தோன்றியவர்கள்’ (ஊhடைனசநn டிக வாந ளுவடிசஅ) என்றொரு நாவலை ஒஸ்திரோவ்ஸ்கி எழுதத் தொடங்கினார். ஆனால், அதை அவர் நிறைவு செய்யவில்லை. இறக்கும்வரை தினசரி 12 மணி நேரத்துக்கு மேலாக இந்த நாவலை வாய்மொழியாகச் சொல்லும் வேலையை அவர் பார்த்து வந்தார். நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி தன்னுடைய 32வது வயதில் 1936 டிசம்பர் மாதம் இறந்தார். அவருடைய ‘வீரம் விளைந்தது’ நாவல். காலம் காலமாக புதிய தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து புதிய சாதனை படைக்கத் தூண்டி வருவதன் மூலம், அவரது பெயரை முழங்கிக் கொண்டிருக்கிறது.‘இதுபோன்ற மகத்தான மனிதர்களை ஒரு நாடு எந்தக் காலத்திலும் மறப்பதில்லை. நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி வாழ்க்கை இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்த் திகழ்ந்து கொண்டேயிருக்கும்’ என்று உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் பாராட்டியிருப்பதை, இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். THEEKATHIR
Labels:
THEEKATHIR
