SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 2, 2017

தண்ணீர் கொள்ளைக்கு தடை நீங்கியது வறண்டு கிடக்கும் தாமிரபரணியில் உபரிநீரை எடுக்கிறதாம் கோக்கும், பெப்சியும் - உயர்நீதிமன்றம் வினோதத் தீர்ப்பு ************************* சென்னை, மார்ச் 2 - தாமிரபரணி ஆற்றில் இருந்துகோகோகோலா - பெப்சி உள்ளிட்டபன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இந்த குளிர்பான ஆலைகள் முறைப்படியான அனுமதி பெற்றே தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதாலும், மேலும் உபரியாக செல்லும் தண்ணீரையே இந்த நிறுவனங்கள் உறிஞ்சுவதாலும் அவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.இது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ‘கோகோ கோலா’ நிறுவனம், தனதுகுளிர்பான கம்பெனியை துவங்கியது. துவக்கத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்ற ‘கோலா’ நிறுவனம் தற்போது ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சிவருகிறது. இதற்காக கோலா நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் தொகை ஆயிரம் லிட்டருக்கு வெறும் 37.50 காசுகள் மட்டுமே ஆகும்.கோலா நிறுவனத்தின் இந்த தண்ணீர் கொள்ளையால், தாமிரபரணி ஆற்று நீரையே தங்களின் விவசாயத்திற்கு நம்பியிருக்கும் நெல்லை,தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும்,தாமிரபரணி மூலம் குடிநீர் ஆதாரத்தைப் பெற்று வந்த நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பொதுமக்களும், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டது. கடைமடைப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. எனவே, கோகோ கோலா நிறுவனம் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால்,அரசு நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குடிநீர் பாட்டில் தயாரிப்பதற்கான ஆலையை துவங்க பெப்சி நிறுவனத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் அந்த நிறுவனத்திற்கு, ரூ. 15 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட36 ஏக்கர் சிப்காட் நிலத்தை, ஆண்டுஒன்றுக்கு வெறும் 36 ரூபாய்க்கு 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தது. அதாவது 36 ஏக்கர் நிலத்தை 98 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கு, பெப்சி நிறுவனம் அரசுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 செலுத்தினால் போதும். இந்த அடிப்படையில் பெப்சி நிறுவனமும், கங்கைகொண்டானிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் நிலை உருவானது.இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி வந்த நிலையிலேயே, சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இந்தவழக்குகள், நீதிபதி எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “அப்போது, விவசாயிகள் ஏற்கெனவே தண்ணீர்தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு எப்படி தண்ணீர் வழங்க இயலும்?” என்று கேள்விஎழுப்பிய நீதிபதிகள், தாமிரபரணி தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/