SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 2, 2017

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி தோழர் பாலமுருகன் படுகொலை கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியல் மதுரை, மார்ச் 2 - சிஐடியு சுமைப்பணித் தொழி லாளர் மாநில சம்மேளனக்குழு உறுப்பினர் பாலமுருகன் என்பவர் மதுரையில் வியாழனன்று கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். மதுரை கோச்சடை,அசோக் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர் கூடல்நகர் ரயில்வே குட்செட்டில் சுமைப்பணித் தொழிலாளி யாக வேலை செய்து வந்தார். சிஐடியுசுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தின் மாநில சம்மேளனக்குழு உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோச்சடை கிளை உறுப்பினராகவும் இருந்தார்.இதே ரயில்வே குட்ஷெட்டில் செந்தில் என்பவர் சுமைப்பணித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். இவர் ஹெச்.எம்.எஸ்.சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். செந்தில், குட்ஷெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு கூலிவழங்குவதில் முறைகேடும் லோடுகள் ஏற்றும் லாரிகளில் மாமூல் வழங்குவதில் குளறுபடி செய்ததை பாலமுருகன் தட்டிக் கேட்டு, செந்திலை பலமுறை கண்டி த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெச்.எம்.எஸ். சங்கத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் செந்தில் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து ராஜூ என்பவர்போட்டியிட்டுள்ளார். சங்கத்தேர்தலில் செந்தில் தோல்வி யடைந்தார். தேர்தலில் தோல்வி யடைந்ததற்கு பாலமுருகன்தான் காரணம் என்று செந்தில் கருதியதாக தெரிகிறது. வியாழனன்று காலை பாலமுருகனை செல்போனில் தொடர்புகொண்ட செந்தில், லோடுவந்துள்ளது; அதனை இறக்க வரு மாறு அழைத்ததாக கூறப்படுகிறது. லோடு இறக்கப்போவதாக வீட்டில் சொல்லிவிட்டு பாலமுருகன் கிளம்பியுள்ளார். பென்னர் கம்பெனி எதிரில்நடராஜ் நகர் வழியாக வந்து கொண்டிருந்த அவரை கூலிப்படையினர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் பால முருகன் பலத்தக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறை யினர், கொலை குறித்து அப்பகுதி யில் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலமுருகனுக்கு இரண்டு மகள்களும், பிளஸ்-2 படிக்கும் மகனும் உள்ளனர்.சிஐடியு சுமைப்பணி தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் கூறுகையில், பாலமுரு கனை கொலை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். கொலைக்குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சங்க நிர்வாகிகள் மற்றும் சுமைப்பணித் தொழிலாளர்கள் தீக்கதிர் அலுவல கம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள பாலமுருகன் உடலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் நேரில் பார்த்தனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். http://epaper.theekkathir.org/