SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 4, 2017

வறட்சிக்கு மேலும் ஒரு விவசாயி பலி ***************ஈரோடு, மார்ச் 4- வறட்சி காரணமாக மேலும் ஒரு விவசாயி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம், புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சென்னிமலைக்கவுண்டர் (68). இவருக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. மூன்று ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தார். கிணற்றில் தண்ணீர் வற்றியதால், வாழை மரங்களைக் காப்பாற்ற கடந்த மாதத்தில் இரண்டு போர்வெல் போட்டார். இரண்டிலும் தண்ணீர் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே வேதனையில் இருந்தார். இந்நிலையில், வெள்ளியன்று காலை தோட்டத்துக்கு சென்ற போது மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மதியம் அவர் உயிரிழந்தார். மாரடைப்பால் விவசாயி இறந்ததால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.