This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, March 4, 2017
SFI - இந்தியாவின் கல்விக் கொள்கையை ஆர்எஸ்எஸ் வகுத்திட அனுமதியோம் தில்லியில் மாணவர்கள் எழுச்சிப் பேரணி ******************* புதுதில்லி, மார்ச் 4- கல்வி, ஜனநாயகம், சமூக நீதி மீதான மத்திய அரசின் தாக்குதலுக்கு எதிராக இந்திய மாணவர்சங்கம் சார்பில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி வெள்ளிக் கிழமை புதுதில்லியில் நடைபெற்றது.மத்தியில் ஆட்சியில் உள்ளஆர்எஸ்எஸ்-பாஜக அரசாங்கம்தன்னுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கல்வி வளாகங்களில் வன்முறை வெறியாட்டங்களில் இறங்கியுள்ளது. மேலும் மாணவர் களிடம் பொருளாதாரத் தாக்குதல் களிலும் இறங்கியுள்ளது. சீரழிக்கப்படும் கல்வி கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகடுமையாக வெட்டிச் சுருக்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும்எழுத்தறிவுத்துறைக்கு 2014-15ல் மோடி அரசாங்கம் 45,722 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இது முந்தைய ஐமுகூ அரசாங்கம் செலவு செய்ததைவிட 1,134 கோடிரூபாய் குறைவாகும். பிறகு, 2015-16இல் திருத்திய மதிப் பீட்டின்படி 42,187 கோடி ரூபாய்செலவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் மேலும் 3,535 கோடி ரூபாய் வெட்டப்பட்டது. இந்த அரசு கடந்த மூன்று ஆண்டுகளிலும் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்விக் கட்டமைப்பையும் வணிக மயம், மதவெறிமயம் மற்றும் மத் திய அரசின் கீழ் முழுமையாக எடுத்துக்கொள்ளும்போக்கு(Commercialisation, communalisation and centralisation)என்பதை நோக்கி உந்தித்தள்ளிக் கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. புறக்கணிக்கப்படும் தலித்-பழங்குடி மாணவிகள் இந்த ஆண்டு தலித்-பழங்குடி யினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் அவர்களின் மக்கள்தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப ஒதுக்கப் படவில்லை. “என்னுடைய கல்வி உதவித்தொகை ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாய் கடந்த ஏழு மாதங்களாக வரவில்லை” என்று ரோஹித் வெமுலா தன் தற்கொலைக் குறிப்பில் எழுதி யிருந்தார். இந்த அரசாங்கம் மாணவர்களின் கல்வி உதவித்தொகை குறித்து எந்த அளவிற்குஇழிவான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் தலித்/பழங்குடி இன மாணவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித் திருக்கின்றன.இந்நிலையில், நாட்டின் கல்விக்கொள்கை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின்பங்கேற்புடன் வகுக்கப்பட வேண்டுமேயொழிய ஆர்எஸ்எஸ்தலைமையகத்தால் மேற்கொள்ளப் படக் கூடாது என்றும், மாணவர்க்கு எதிரான கல்விக் கொள்கையை எதிர்த்தும் இப்பேரணி நடை பெற்றது. பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, எம்.பி., அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பலர் உரை யாற்றினார்கள். (ந.நி.) http://epaper.theekkathir.org/
Labels:
SFI
