SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 4, 2017

புரட்சியை பாதுகாத்த தோழர் ஸ்டாலின் ட அ. அன்வர் உசேன் சோவியத் புரட்சிக்கு அடித்தள மிட்டவர் தோழர் லெனின் எனில் அந்த மகத்தான புரட்சியை பாதுகாத்து முன்னெடுத்து சென்ற பெருமை தோழர் ஸ்டாலின் அவர்களை சாரும். மார்ச் 5ஆம் தேதி அவரது நினைவு தினம் ஆகும்.தனது 74ஆவது வயதில் 1953ஆம் ஆண்டு ஸ்டாலின் மறைந்தார்.உற்பத்தி சக்திகள் வளர்ந்த இங்கிலாந்து அல்லதுஜெர்மனி போன்ற முதலாளித்துவ நாடுகளில்தான் புரட்சி முதலில் வெல்லும் என காரல் மார்க்சும் ஏங்கெல்சும் மதிப்பிட்டனர். அவர்களது காலத்தில் இது சரியான மதிப்பீடும் ஆகும். எனினும் லெனின்காலத்தில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய கட்டத்தைஅடைந்தது. இதனை துல்லியமாக ஆய்வு செய்த லெனின் முதலாளித்துவம் எனும் சங்கிலியில் பலவீனமான கண்ணியில் புரட்சி வெல்லும் வாய்ப்புஉள்ளது என்பதை தெளிவுபடுத்தினார். புரட்சிக்கு அகநிலை காரணியான தொழிலாளி வர்க்கமும் அதன் அரசியல் அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சியும் தகுதி படைத்ததாக இருந்தால் ரஷ்யா போன்ற பின் தங்கிய தேசத்தில் புரட்சி சாத்தியமே என்பது லெனின் நிலையாக இருந்தது. பின்தங்கிய நாடான ரஷ்யாவில் புரட்சி சத்தியமா? அத்தகைய தகுதியும் ஆற்றலும் வாய்ந்த ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தையும் கம்யூனிஸ்டு கட்சியையும் உருவாக்கியதில் லெனின் பங்கு ஈடு இணையற்றது. அதில் லெனினுக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் ஸ்டாலின். எனினும் டிராட்ஸ்கி போன்ற செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் ரஷ்யாவில் புரட்சி சாத்தியமில்லை என வாதிட்டனர். புரட்சிக்கு எதிராகவும் நின்றனர்.எனினும் 1917ஆம் ஆண்டு புரட்சி வென்றது. லெனி னின் ஆய்வு சரியானதே என நிரூபிக்கப்பட்டது.புரட்சி நடந்த ஏழே ஆண்டுகளில் லெனின் உயிர் நீத்தார். புரட்சிக்கு வெகு வலுவான அடித்தளத்தை லெனின் உருவாக்கியிருந்தார். எனினும் பிரச்சனைகள் ஏராளமாக இருந்தன. லெனினுக்கு பிறகு புரட்சியை பாதுகாத்து அதனை முன்னெடுத்து செல்லவேண்டிய பெரிய பொறுப்புஸ்டாலினுக்கு ஏற்பட்டது. டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் ரஷ்ய கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இருந்தனர். ரஷ்யாவில் புரட்சி சாத்திய மில்லை எனும் தமது கருத்துகளை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து கட்சியை விவாதங்களில் மூழ்கடிக்க முயன்றனர். ரஷ்யாவில் புரட்சி தொடர்வது சாத்தியமா இல்லையா எனும் சித்தாந்த கருத்து மோதல் கட்சிக்குள் வெடித்தது.லெனினுக்கு பிறகு தமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் மனப்பால் குடித்தனர். ஸ்டாலினுக்கு சித்தாந்தப் போர் நடத்த இயலாது என அவர்கள் எண்ணினர். ரஷ்யா எனும் தனி தேசத்தில் புரட்சிசாத்தியம் என்பதை சித்தாந்த மட்டத்தில் மட்டுமல்ல;நடைமுறையிலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம்ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. ரஷ்ய உழைப்பாளி மக்கள் புரட்சியை பாதுகாப்பார்கள் எனும் ஆழ மான நம்பிக்கை ஸ்டாலினுக்கு இருந்தது. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரும்பான்மையினர் ஸ்டாலின் தலைமை பக்கம் நின்றனர். ஸ்டாலின்போராடினார்; டிராட்ஸ்கி கருத்துக்கு எதிராகசித்தாந்த மட்டத்தில் மட்டுமல்லாது நடைமுறைப் படுத்தவும் போராடினார். ஒரு கட்டத்தில் டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் புரட்சி யை சீர்குலைக்க முனைந்தனர். இதனை ரஷ்ய உழைப்பாளி மக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அதில் தலைமைப் பங்கு ஸ்டாலினுக்கு இருந்தது. தலைமை பண்புக்கு இலக்கணம் சோவியத் ரஷ்யாவில் உற்பத்தி சக்திகளை வளர்த்திட உழைப்பாளிகளை ஊக்கப்படுத்தியும் வழிநடத்தியும் ஸ்டாலின் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. திட்டமிட்ட பொருளாதாரம் எனும் கோட்பாட்டை ஸ்டாலின் தலைமையில் சோவியத்ரஷ்யா முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தி யது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நான்கு ஆண்டுகளிலேயே நிறைவேற்றப்பட்டன. உற்பத்தியில் சாதனை படைத்த விவசாயி அல்லது தொழிலாளி எவராக இருந்தாலும் கிரெம்ளின் மாளிகைக்கு அழைக்கப்பட்டார். ஸ்டாலின் அவரை சந்தித்தார். பாராட்டினார். ஊக்கப்படுத்தினார். அவர்கள் உத்வேகத்துடன் திரும்பினர். மேலும் சாதனைகளை படைத்தனர். புதிய கண்டுபிடிப்புகளை படைத்த விஞ்ஞானிகளும் ஸ்டாலினிடமிருந்து அழைப்பு பெற்றனர். ஒவ்வொரு உழைப்பாளியையும் ஸ்டாலினின் வழிகாட்டுதல் ஊக்கப்படுத்தியது. ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் தலைமை பண்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்டாலின் இலக்கணம் வகுத்தார் எனில் மிகை அல்ல.சோவியத் ரஷ்யா புதிய சமூகத்தை படைத்தது. அந்த சமூகம் புதிய மனிதனை படைத்தது. அதில் ஸ்டாலினின் பங்கு மகத்தானது. தொழிலும் விவசாயமும் பன்மடங்கு வளர்ந்தன. முதலாளித்துவ உலகம் நெருக்கடியில் திணறிக்கொண்டிருந்த பொழுது சோவியத் யூனியன் சாதனைகளை படைத்துக்கொண்டிருந்தது. 1934ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடைசி வேலை வாய்ப்பு அலுவ லகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அந்த விழா விற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் பேசினார்: ‘‘முதலாளித்துவ நாடுகளில் மக்கள் வேலைகளை தேடிக்கொண்டுள்ளனர்; ஆனால் ரஷ்யாவில் வேலைகள் மக்களை தேடிக்கொண்டுள்ளன.’’ஆம்! சோவியத் ரஷ்யாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது. இது சோசலிச சமூகத்தில்தான் சாத்தியம்! அதனை சோவியத் யூனியன் நிரூபித்தது. இந்த சாதனைக்கு பின்னர் இலட்சக்கணக்கான ரஷ்ய உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு இருந்தது. அவர்களுக்குதலைமை தாங்கிய ஸ்டாலினுக்கு அதில் முக்கியப் பங்கு இருந்தது. பாசிசத்திற்கு எதிரான போரில்... ஜெர்மனியில் இட்லர் தலைமையிலான முதலாளித்துவம் மிகக்கொடூரமான பாசிச வடிவத்தை எடுத்து வருகிறது என்பதை சோவியத் யூனியன் 1928ஆம் ஆண்டிலிருந்தே எச்சரித்தது. இந்த பாசிசக் கூட்டணியை முறியடித்து உலகைகாப்பாற்ற பாசிசத்தை வெறுக்கும் அனைத்து நாடுகளும் ஒரு ஐக்கிய முன்னணி அமைக்க முன்வரவேண்டும் என சோவியத் யூனியன் வலியுறுத்தியது. எனினும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செவி மடுக்கவில்லை. அவர்களுக்கு சோசலிச புரட்சிதான் பாசிசத்தைவிட அதிக பயத்தை அளித்தது. எனவே பாசிசம் உருவாவதும் அது சோசலிசத்தை அழிக்க முன்வருவதும் தமக்கு சாதகம்தான் என எண்ணினர். இதனை அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி ட்ரூமனின் கீழ்கண்ட கூற்று மிக தெளிவாக வெளிப்படுத்தியது:‘‘ஜெர்மனி வெல்வது போல சூழல் உருவா னால் நாம் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யாவெல்வது போல சூழல் உருவானால் நாம் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் அவர்களுக்குள் போரிட்டுகொண்டு அதிகபட்சம் ஒருவருக் கொருவர் கொன்று குவித்துக்கொள்ளட்டும்’’.கம்யூனிச எதிர்ப்பு அவர்களின் கண்களை மறைத்தது என்பதற்கு ட்ரூமனின் இக்கூற்று சிறந்தஎடுத்துகாட்டு. எனினும் ஒற்றுமைக்கு சோவியத் யூனியன் தொடந்து கடினமாக உழைத்தது. அதேசமயத்தில் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டது. 1941இல் இட்லர் சோவியத் யூனியனை தாக்கியபொழுது தன்னந்தனியாக போரிட்டது. இரண்டாம் உலகப்போரில் மொத்தம் 6.56 கோடி பேர் உயிரிழந்தனர். இதில் சோவியத் யூனியன் மட்டும் 2.40 கோடி பேரை இழந்தது. மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு சோவியத் யூனியன் மக்களின் தியாகம் ஆகும். சோவியத்தின் ஒவ்வொருகுடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்த மகத்தான தியாகம்தான் பாசிசத்திடமிருந்து உலகை காப்பாற்றியது.இந்த போரில் சோவியத் மக்களையும் செஞ்சேனையையும் ஸ்டாலின் திறமையாக வழிநடத் தினார். போர்க் காலங்களில் ஸ்டாலின் கிரெம்ளின் மாளிகையில் இருக்கவில்லை. மாறாக போர் முனையில் இருந்தார். கூடாரங்களில் தங்கினார். வீரர்களை உற்சாகப்படுத்தினார். எனவேதான் உலகப் போருக்கு பிறகு ஸ்டாலின் உலக மக்களின்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தார். ஃபீனிக்ஸ் பறவை போல... இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனிய னுக்கு மனித இழப்புகள் மட்டுமல்ல; சோசலிசம் உருவாக்கிய பல ஆலைகள், அணைகள், கிராமங்கள், சுரங்கங்கள், கால்நடைகள் என அனைத்தும்அழிந்தன. இந்த இழப்புகள் குறித்து பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றியவரும் போர்க் காலத்தில் அமெரிக்க படைத் தளபதியாக இருந்தவருமான ஐசன்ஹோவர் தனது நினைவுக் குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:‘‘1945இல் நான் விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் கண்ட காட்சிகள் சொல்ல முடியாத மனவேதனையை அளித்தன. சோவியத் யூனியனின் மேற்கு எல்லையிலிருந்து மாஸ்கோ நகரம் வரை ஒரு வீடு கூட முழுமையாக இல்லை. அனைத்து வீடுகளும் அழிக்கப்பட்டி ருந்தன. இந்த நிலப்பரப்பில் லட்சக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் (இட்லர் படைகளால்) கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையை சோவியத் அரசாங்கத்தால் கணக்கீடு செய்ய முடியவில்லை என மார்ஷல் சுகோவ் என்னிடம் கூறினார்’’(Crusade in Europe/by Dwight D Eisenhower). .எனினும் ஸ்டாலின் கலங்கவில்லை. சோவியத் மக்களை தட்டி எழுப்பினார். சோவியத் யூனியன் மறுகட்டமைப்புக்கு ஊக்கப்படுத்தினார். மிக குறுகிய காலத்தில் சோவியத் யூனியன் மீண்டது. ஆம்! ஃபீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து சோவியத் யூனியன் புத்துயிர் பெற்று எழுச்சி கொண்டது. இது சோவியத் மக்களின் உன்னதமான மன ஆற்றலுக்கும் படைப்பாக்கத்திற்கும் கிடைத்த பெருமை. அவர்களை அவ்வாறு செய்ய வைத்த பெருமை ஸ்டாலினுடையது!1953ஆம் ஆண்டு ஸ்டாலின் மறைந்த பொழுது சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு இணையாக ஒரு வல்லரசாக வளர்ந்திருந்தது. இந்தியா உட்பட புதியதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தது. ஸ்டாலின் மீது விமர்சனங்கள் உண்டு. அவரது மகத்தான சாதனைகள் தனிநபர் துதிபாடலுக்கு வழிவகுத்தது எனும் குற்றச்சாட்டு உள்ளது. எனினும் ஸ்டாலின் எனும் மகத்தான கம்யூனிஸ்ட்டின் வாழ்வும் அவர் வாழ்ந்த சூழலையும் சீர்தூக்கிப் பார்த்தால் அவரது குறைகளைவிட சாதனைகள் ஏராளம்! தங்கத்தில் குறை இருந்தாலும் அதனை எவரும் தூக்கி எறிந்துவிடுவது இல்லை!சோவியத் புரட்சியின் நூற்றாண்டில் அப்புரட்சியை பாதுகாத்து முன்னெடுத்துச் சென்றதோழர் ஸ்டாலினின் சீரிய பங்கு குறித்து எண்ணா மல் இருக்க இயலாது. http://epaper.theekkathir.org/