SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 4, 2017

ஹைட்ரோ கார்பனை நிராகரித்த உலக அனுபவம் தாய்ப்பாலா? பவுடர்பாலா? *********************இந்தியாவின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய ஹைட்ரோகார்பன் கலவைகளான பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மீத்தேன் தேவை; எனவே இத்தகைய திட்டங்கள் தேவை தான் என்ற கருத்து வணிக ரீதியாக முன் வைக்கப்படுகிறது.ஹைட்ரோ கார்பன்கள் எடுத்தல் , அணு உலைகள் போன்ற திட்டங்கள் தேவையில்லையெனில். வேறு என்ன செய்யலாம்?நிச்சயம் வேறு சிறந்த வழிகள் இருக்கவே செய்கின்றன. அது தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துவது.புதுப்பிக்கத்தக்க வளங்களான சூரிய ஒளி , நீர் , காற்றாலை , கடலலை ஆகியவற்றின் ஆற்றல்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தின் மொத்த ஆற்றல் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். இதனால், இயற்கையைத் தொந்தரவு செய்யும் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. புவி வெப்பம் அதிகரித்து வரும் இவ்வேளையில் , சூழலியலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உலக சமூகம் இறங்கியிருக்கும் வேளையில் இதனைக் குறித்து பேசுவது அவசியமாகிறது.உலகில் பல மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஸ்காண்டினேவியன் நாடுகளான நார்வே , டென்மார்க் போன்ற நாடுகள் புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகின்றன. நார்வேயின் அனுபவம் நார்வே நாட்டின் 99 சதவீத மின்சாரம் நீர் மின் ஆற்றல் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. நார்வே அரசின் மூலம் 9 நீர் திறன் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. காற்றாலை மின் திட்டமும் நார்வே நாட்டு மின் தேவையில் பங்கு வகிக்கிறது. இதனால் நார்வே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும், புவி வெப்பமய அதிகரிப்பில் பங்கு வகிக்காமலும் இப்புவிக்கு தனது அறம் நிறைந்த பணியை வழங்கிக் கொண்டிருக்கிறது. டென்மார்க் டென்மார்க் , 2015ம் ஆண்டின் கணக்குப்படி தனது மொத்த மின் தேவையில் 42.1 சதவீதத்தை காற்றாலை மின்சாரம் மூலம் பெறுகிறது. 2013ம் ஆண்டு 33 சதவீதமாக இருந்த டென்மார்க்கின் காற்றாலை மின் உற்பத்தி 2014ம் ஆண்டு 39 சதவீதமாக மாறி 2015ம் ஆண்டளவில் 42.1 சதவீதத்தை அடைந்திருக்கிறது. 2012ம் ஆண்டு அந்த நாடு தீட்டியுள்ள திட்டப்படி 2020ம் ஆண்டுக்குள் 50 சதவீத மின் தேவையை காற்றாலை மூலமே அடையும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2035ம் ஆண்டுக்குள் 100 சதவீத மின் தேவையையும் காற்றாலை மின்னுற்பத்தி மூலமே பூர்த்தி செய்வதே அதன் நீண்ட கால இலக்கு. இதுவே ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வை என்பது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் வாரியத்தின் செயல்திட்டம் என்ன? 2015ம் ஆண்டின் கணக்குப்படி , ஒட்டுமொத்த ஐரோப்பாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு 16 சதவீதமாக உள்ளது. காலநிலை மாற்ற எச்சரிக்கைகள் உலக சமூகத்தை உலுக்கிய பின் ஐரோப்பிய சுற்றுச்சூழல் வாரியம் எடுத்த முக்கிய முடிவு. ‘‘2050ம் ஆண்டுக்குள் ஐரோப்பாவால் வளிமண்டலத்துக்குள் அனுப்பப்படும் பசுமைக் குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயுக்கழிவுகளின் அளவை 80 முதல் 95 சதவீதம் வரை குறைக்க வேண்டும்’’ என்பது.ஹைட்ரோகார்பன் கலவைகளான மீத்தேன் , பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு ஆகியவை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் போது, கார்பன்- டை ஆக்சைடை வெளியேற்றி வளிமண்டலத்தில் கரியமிலத் தன்மையின் அளவை அதிகரித்து, பூமியிலிருந்து வெப்பம் வெளியேறாமல் தடுத்து புவியின் வெப்பத்தை அதிகரிக்கின்றது.ஆகவே புவி வெப்பமய எச்சரிக்கைகளுக்குப் பிறகு கூட்டப்பட்ட காலநிலை மாற்ற மாநாடுகள் முன் வைத்த முக்கியக் கோரிக்கைகள், உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் தரப்பிலிருந்து வெளியேற்றும் கார்பன் வாயுவின் அளவை வெகுவாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். இதனையடுத்தே ஐரோப்பிய நாடுகள் இந்நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதன் விளைவு தான், அந்நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை அதிகமாக பயன்படுத்துவதை நோக்கி நகர்ந்திருப்பது. இந்தியாவில் முடியாதா? ஐரோப்பாவை விட நீண்ட கடற்கரைப் பரப்பைக் கொண்டுள்ள , மிக அதிக சூரிய வெப்பத்தை உள்வாங்குகிற, நீர் வளம் அதிகம் நிரம்பிய நாடான இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் , நாட்டின் மொத்த மின் தேவையில் கணிசமான அளவை பூர்த்தி செய்ய முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். சூரிய ஒளி மின்னுற்பத்தியில் சாதித்த சிலி இந்தியாவைப் போலவே வெப்பப்பிரதேசமான தென் அமெரிக்காவின் சிலி, சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. வடக்கு சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் நிறுவப்பட்ட சோலார் வயல்களின் (சூரிய ஆற்றல் உற்பத்தி வயல்கள்) மூலம் 2013ம் ஆண்டு உச்சபட்சமாக 770 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கும் அளவுக்கு சிலியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நடக்கிறது. நடப்பதும், செய்ய வேண்டியதும் ஆக , உலகம் முழுவதுமே புதுப்பிக்கத்தக்க வளங்களை ஆற்றல்களாக மாற்றுவதற்கான பிரம்மாண்டசெயல்திட்டங்கள் அரங்கேறி வருகின்றன.ஆனால் , இந்திய அரசோ ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தின் மூலம் விவசாய கிராமங்களின் நீர்வளம் , மண்வளம் , மக்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் நாசம் செய்து , திட்டத்தை செயல்படுத்தப் போகும் தனியார் நிறுவனங்களுக்கு பெருத்த லாபத்தையும், அதன் மூலம் அரசு அதிகார மையங்கள் கொழுத்த வேட்டையையும் நிகழ்த்துவதே தனது தேசப்பற்று, வல்லரசுக் கனவு, ஒளிரும் இந்தியா என்று கதைத்து வருகிறது. சூரிய ஒளி, காற்றாலை, கடலலை போன்ற ஆற்றல் உற்பத்தி திட்டங்களில் அரசு அதிகார மையங்களும் தனியார் நிறுவனங்களும் என்ன பெரிய பலன் அடைந்து விட முடியும்? அதன் பலன் முழுவதும் மக்களுக்குத் தானே. எனவேதான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை அலட்சியப்படுத்துகிறது அரசு.ஆனால், மோடி அரசு உண்மையிலேயே மக்கள் நல அரசாக இருந்தால் ‘இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் காற்றாலைகளை நிறுவலாம்; நில்லாத கடல் அலைகள் மூலம் தடையில்லாத ஆற்றலைப் பெறலாம்; கடல் நடுவே காற்றாலைகளை நடுவதன் மூலம் மிக அதிக மின்னாற்றலைப் பெறலாம், வருடத்தில் பெரும்பான்மை மாதங்கள் சூரிய வெப்பப் பொழிவை பெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவில் சரியான இடங்களில் சோலார் வயல்களை அமைப்பதன் மூலம் கணிசமான அளவு மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம். என்ன நன்மை? ஹைட்ரோ கார்பன் எடுத்தல் போன்ற திட்டங்களை விட, புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தும் திட்டங்களால் என்ன நன்மைகள் ?1. ஹைட்ரோகார்பன் திட்டத்தை விட, புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு ஆகும் செலவு மிகக் குறைவு தான்.2 - புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவதால் நீர் வளம் , மண் வளம் , விவசாயம் ஆகியவை பாதிக்கப்படப் போவதில்லை.3 - புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவதால் கார்பன் வாயு வெளியேறி புவி வெப்பத்தை அதிகரிக்கப் போவதில்லை.இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது... ‘‘தாய்ப்பாலை அழித்து விட்டு பவுடர் பால் குடிப்பது வளர்ச்சியல்ல’’. http://epaper.theekkathir.org/