SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

பாசிசத்தின் கொக்கரிப்பு *********************கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் தலையைக் கொண்டுவருவோருக்கு ஒரு கோடி பரிசளிக்கப்படும் என்று மத்தியப்பிரதேச ஆர்எஸ்எஸ் தலைவர் குந்தன் சந்தராவத் அறிவித்துள்ளார். தனது சொத்துக்களை விற்பனை செய்து அந்த ஒரு கோடியைத் தருவேன் என்றும் கூறியுள்ளார்.மேலும் ‘நீங்கள் கோத்ராவை மறந்துவிட்டீர்களா? அங்கு எங்கள் 56 பேரை கொன்றதற்காக நாங்கள் 2000 பேரை கப்ரிஸ்தானுக்கு (இடுகாட்டுக்கு) அனுப்பினோம். தற்போது கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஆர்எஸ்எஸ் ஆட்களை கொலை செய்தார்கள்’‘. கம்யூனிஸ்டுகள் எங்களின் 300 பேரைக் கொலை செய்தால் அவர்கள் மூன்று லட்சம் பேர்களை தலையைக் கொய்து பாரத மாதாவின் காலடியில் சமர்ப்பிப்போம்” என்று குந்தன் கொக்கரித்துள்ளார்.இந்தச் செய்தியை பார்த்த தோழர் பினராயி விஜயன் “ஆர்எஸ்எஸ் எங்கள் தோழர்கள் பலரின் தலைகளை வெட்டிச் சாய்த்துள்ளது. ஆனால் அதற்காக மிரட்டலுக்கு அஞ்சி எங்கள் பயணம் நிற்காது. குந்தனின் கூற்றை நான் கண்டனத்தோடு தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயற்குழு இதுபற்றி ”இந்த மிரட்டல் பாஜக உஜ்ஜயினி தொகுதி எம்பி சிந்தாமணி மாளவியா மற்றும் மோகன் யாதவ் முன்னிலையில் நிகழ்ந்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமையும், பிரதமர் நரேந்திர மோடியும் இதைக் கண்டிக்க முன்வரவேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கொலைமிரட்டல் விடுத்துள்ள குந்தனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கூறியுள்ளார். காந்தியை கொலை செய்த நாங்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்வோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மிரட்டுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் சுனில்குமார் குறிப்பிட்டுள்ளார். கேரள பாஜக, நாங்கள் குந்தனைப்பின்பற்றாமல் ஜனநாயக வழியையே பின்பற்றுவோம் என்று கூறியுள்ளது. கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தான் மார்க்சிஸ்ட் ஊழியர்களை தொடர்ந்து கொலை செய்து வருகிறது என்பதை கேரள மக்கள் நன்கறிவார்கள். நாடும் நன்கறியும். இதனால்தான் பாஜக தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் கூறி வருகிறது. பாசிசப் பாம்பை இங்கும் தலை உயர்த்த அனுமதிக்கக்கூடாது. - எஸ்.ஏ.பி. THEEKATHIR