SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

PINARAYEE VIJAYAN THREATENED: வரலாற்றின் குப்பைத்தொட்டியில் ஆர்எஸ்எஸ் ‘தேசாபிமானி’ தலையங்கம் பினராயிக்கு ஆர்எஸ்எஸ் மிரட்டல் மத்திய அரசு மவுனம் ஏன்? புதுதில்லி, மார்ச் 3-கேரள முதல்வர் பினராயி விஜய னுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் விடுத்துள்ள அச்சுறுத்தல்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி யில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர், ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ள முதல்வரின் தலையைக் கொணர்பவ ர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.இதன்மூலம் ஆர்எஸ்எஸ், சமீபகாலங்களில் கேரளாவில் கட்டவிழ்த்து விட்டிருப்பது போல நாடு முழுவதும் தன்னு டைய வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டிருப்பது மீண்டும் தெளிவானமுறையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக அரசாங்கங்கள் மவுனம் கடைப்பிடிப்பது என்பது இத்தகையஆர்எஸ்எஸ்-அமைப்பின் அருவரு ப்பான மிரட்டல்களை சரி என்று ஏற்றுக்கொள்வதுபோலாகிவிடும்.இவ்வாறு அறிவித்திருப்பதற்கு எதிராக சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் நாட்டிலுள்ள சட்டங்களின்படி உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. (ந.நி.) மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கொலைவெறியுடன் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் நடைபெற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.தலைவரான டாக்டர் குந்தன் சந்தராவத் பினராயி விஜயனின் தலையைத் துண்டித்துக் கொண்டுவர கோரியுள்ளார். இந்தக் கொடுஞ்செயலைச் செய்பவர்களுக்குத் தனது சொத்தை விற்றாவது ஒரு கோடி ரூபாய் சன்மானமாகத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது கொலைவெறிப் பேச்சு அத்துடன் முடிந்துவிடவில்லை. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் முதலமைச்சருக்கும் கோத்ரா சம்பவத்தை நினைவூட்டிய அவர் கேரளத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களின் மண்டையோடுகளை பாரத மாதாவிற்கு மாலையாகச் சார்த்துவேன் என்றும் அவர் கொக்கரித்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சியில்தான் சந்தராவத் பகிரங்கமாக கொலைவெறிப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரும் சந்தராவத்தின் கொலைவெறிப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முன்வரவில்லை என்பது மட்டுமல்ல அவரது பேச்சிற்கு கைதட்டி ரசிப்பதற்கும் தயாரானார்கள். பினராயி விஜயன் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரை நோக்கி சங்பரிவாரின் கொலைவாள் உயர்ந்துவருவது இது முதல் முறையல்ல. கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக அறியத் துவங்கிய நாள் முதல் இந்த இருட்டின் சக்திகள் அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பி வந்துள்ளனர். கடைசியாக மங்களூருவில் நடைபெற்ற மதநல்லிணக்கப் பேரணியில் பினராயி விஜயன் பங்கெடுப்பதை தடுப்போம் என்று இதே சக்திகள் வெறித்தனமாக கூறியிருந்தார்கள். மத நல்லிணக்கப் பேரணி நடைபெறுவதற்கு முந்தைய நாள் கேரளத்திலுள்ள ஒரு பாஜக தலைவர் பினராயி விஜயன் மீது கொலைவெறிப் பேச்சை நடத்தியிருந்தார். ஆனால் அந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் மத நல்லிணக்கப் பேரணியைத் துவக்கி வைத்த பினராயி விஜயன் அந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் சுயரூபம் என்ன என்பதையும் தனது பேச்சின் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் செய்திருந்தார். பினராயி விஜயனின் பேச்சை தேசிய நாளிதழ்கள் உள்பட அனைத்துப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தன. அத்தகைய ஒரு செய்தியை மறக்கடிக்கச் செய்வதற்காக இருக்கலாம் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இத்தகையக் கொலைவெறிப் பேச்சு. சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் பினராயி விஜயன் பங்கேற்கவிருந்த ஒரு நிகழ்ச்சி சங்பரிவாரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ரத்து செய்யவேண்டியதாயிற்று. அரசியல் சட்டத்தை மதிக்கும் வகையில் அம்மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தான் தவிர்த்ததாக பினராயி விஜயன் பின்பு தெளிவுபடுத்தியிருந்தார். அன்று பினராயி விஜயன் நடந்து கொண்ட அரசியல் நாகரீகமான செயல்தான் இன்று சங்பரிவார் சக்திகள் அவரது தலையை கொய்வோம் என்று கொலை வெறிக்கூச்சல் நடத்துவதற்கு காரணமாகியுள்ளது. தேசப்பிதாவின் மீது துப்பாக்கிக் குண்டுகளைப் பிரயோகித்த சக்திகளுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் மூன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் முதலமைச்சராவார் பினராயி விஜயன். அவருக்கு நேராக எழுப்பப்பட்ட கொலைவெறிக்கூச்சல் என்பது ஒவ்வொரு பொது மக்களுக்கு எதிராகவும் எழுப்பப்பட்டது என்பதுதான் இதன் சாரம்.ஒழுக்கம் சார்ந்த அரசியலை ஆர்.எஸ்.எஸ்-ஸிடமிருந்து யாரும் எதிர்பார்க்க முடியாது என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் நெறி முறைகளையும் எப்போதுமே ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் சங்பரிவார்கள். எனவேதான் அரசியல் நெறிமுறையை கடுமையாக மீறும் இத்தகைய கொலைவெறிப் பேச்சின் மீது எந்தத் தவறும் அவர்களால் காண இயலவில்லை. அரசியலமைப்புச் சட்டப்படி நமது ஆட்சி முறை என்பது மத்திய-மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்ததாகும். இதில் பிரதமருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கும் உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு போலவே முதலமைச்சரின் பாதுகாப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதித்துவம் மத்திய அரசிற்கும் பிரதமருக்கும் உண்டு. எனவே கொலைவெறியைத் தூண்டுபவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தும் பொறுப்பு முதல் ’சங்பரிவார் பிரச்சாரகரான’ பிரதமருக்கு உண்டு என்று அர்த்தம். பல முக்கியமான விஷயங்களில் மனம் திறந்து பேசாத பிரதமர் இந்த விஷயத்தில் மட்டும் வாய் திறந்து பேசிவிடுவார் என்றும் எதிர்பார்க்க முடியாது.எதனால் பினராயி விஜயனுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு எதிராகவும் கொலைவெறியைத் தூண்டுகிறார்கள்? ஆர்.எஸ்.எஸ்-ஸின் தீவிர இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும் மதவாதத்தையும் இன்றும் வலுவாக எதிர்க்கின்ற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி இயக்கங்களும்தான் என்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும். இரண்டாவதாக சங்சாலக் எம்.எஸ்.கோல்வால்க்கர் தனது ’சிந்தனைக்கொத்து’ என்ற புத்தகத்தில் கூறுவது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்ட்டுகளும்தான் நமது பிரதான எதிரிகள் என்பதாகும். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத, பிரிட்டீஷ்காரர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சிறையிலிருந்து விடுதலை தேடிய, தேசப்பிதாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-ஸின் எதார்த்த முகம் இதுதான் என்று இந்திய மக்களுக்குத் தெளிவுபடுத்தும்இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அயோத்தி, கோத்ரா, மீரட், முசாபர் நகர் மேலும் பல இடங்களில் மதக்கலவரங்கள் நடந்தபோது அதில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பங்கு என்ன என்பதை அச்சமின்றி எடுத்துக்கூறியதும் மார்க்சிஸ்ட் கட்சிதான். இத்தகையக் காரணங்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சியை நிசப்தமாக்குவது சங்பரிவாரின் தேவையாகும். கருத்து ரீதியாக மார்க்சிஸ்ட் கட்சியையும், இடதுசாரி இயக்கங்களையும் தோற்கடிக்க இயலாது என்பது புதுதில்லி பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களில் எழுந்த மாணவர் போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கொன்று காரியத்தைச் சாதிக்கும் சங்பரிவாரின் முயற்சி. ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறப் போவதில்லை. தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக மக்கள் சமூகம் இந்த வன்முறைக் கூட்டத்தை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியும். தேசாபிமானி தலையங்கம் (3.3.2017)தமிழாக்கம்: எம்.சங்கரநயினார் THEEKATHIR