SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 4, 2017

THEEKATHIR - எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வை-பை வசதி துவக்கம் சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு ******************** சென்னை,மார்ச். 4- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே துறையில் பல்வேறு புதிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் ரயில்வே அமைச்சர் மந்திரி சுரேஷ் பிரபாகர் பிரபு தொடங்கி வைத்தார்.மூர்மார்க்கெட் வளாகம் -பேசின் பிரிட்ஜ் இடையே 2 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.30.14 கோடியில் 5 வது மற்றும் 6 வது ரயில் பாதைகள், நெமிலிச்சேரியில் பயணிகள் சுரங்கப்பாதை, எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வை-பை வசதி, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருவழி நடைமேடை, கோடம்பாக் கம் ரயில் நிலையத்தில் புதிய மேல் தள பயணச்சீட்டு அலுவலகம், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை மற்றும் பயணச் சீட்டு அலுவலகம், வாரம் இருமுறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், அருப்புக்கோட்டை மார்க்கமாக செங்கோட்டை வரை நீட்டிப்பு, மதுரை ரயில் நிலையத்தில் வைஃபை சேவை, செங்கோட்டை புதிய ஆரியங்காவு இடையே மாற்றியமைக்கப்பட்ட அகல ரயில் பாதை ஆகிய திட்டங்களை அவர் சனிக்கிழமை (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு பேசியதாவது:-அதில் ரூ. 55 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள தொகையை ரயில்வே நிதி ஆதாரங்கள் அடிப்படையில் திரட்ட வேண்டும். பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் வருமானம் தவிர வேறு வகையிலும் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிற இனங்கள் வருமானம் மூலம் ரூ.17 ஆயிரம் கோடி நிதி திரட்டப்படும். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரயில்வே மூலம் ரூ. 1560கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 2,287 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.சி,எப் ஆலை நவீனமயமாகிறது ஐ.சி.எப். தொழிற்சாலை நவீனப்படுத்தப்படுகிறது. இலகுரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். ரயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்படும். நாடு முழுவதும் உள்ள 44 ஆயிரம் ரயில் பெட்டிகள் நவீனப்படுத்தப்படும். சென்னை சென்ட்ரல் உள்பட நாடு முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்களில் வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் பயணிகள் பாதுகாப்புக்கு ரூ. 1 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.எரிபொருள் செலவினத்தை ரூ.12 ஆயிரம் கோடியாக மிச்சப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன் பதிவு மற்றும் ரத்து செய்வதற்கு ஒரே செயலி (ஆப்) செயல்படுத்தப்படும். தொழில் நகரங்களான கோவை-பெங்களூரு இடையே விரைவில் புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிவேக ரயில்களை இயக்கக் கூடிய ஜப்பான், தென் கொரியா நாடுகளைப் போன்று இந்தியாவிலும் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களை தமிழ் நாட்டில் செயல்படுத்த மாநில அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் அந்த மாநிலங்களில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அது போல தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற வேண்டுமானால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட் ஜோர்ரி சென்ட் ரல் ரயில் நிலைய மேலாளர் உமா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/