This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, March 4, 2017
THEEKATHIR - புருடா மன்னனின் ‘தூய்மையான’ ராஜ்யம் ++++++++++++எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் தேஜ் பஹதூர் யாதவ் ஜனவரி மாதத்தில், இராணுவத்தில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து அம்பலப்படுத்தினார். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மோசமான உணவையும், நல்ல உணவுக்கான பொருட்கள் இராணுவ அதிகாரிகளால் வெளியே விற்கப்படுவதையும் வீடியோவில் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ பிரபலமாகி, பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. அதுகுறித்து தேஜ் பஹதூரிடம் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படும் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அதன் பின் விபரங்கள் வெளியாகவில்லை.இப்போது தேஜ் பஹதூரிடமிருந்து இன்னொரு வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சல் தருவதாகவும், அவரது மொபைலை அபகரித்து, அதில் மோசடிகள் செய்து, தேஜ்பஹதூருக்கு பாகிஸ்தானில் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று அவதூறு செய்வதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார். ‘‘ஊழலை வெளிப்படுத்தினால் இதுதான் ஒரு ஜவானுக்கு திரும்பக் கிடைக்குமா என பிரதமரிடம் கேளுங்கள்’’ என நாட்டு மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.புருடா மன்னன் மோடியின் ‘‘தூய்மையான’’ ராஜ்ஜியத்தில் நடக்கும் ஊழல் குறித்து பேசினால் தேச விரோதம். அவரை நோக்கி விரல்களை நீட்டினால் அது பாகிஸ்தானுக்கு துணை போகும் காரியம். 24 மணி நேரமும் களவாணித்தனம்தான்! மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து புகைய ஆரம்பித்திருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதாக பாஜக தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கும் வேளையில், அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடந்த தகிடுதத்தங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.நாசிக்கில் பதிவான வாக்குகள், அங்குள்ள மொத்த வாக்குகளை விட அதிகமாக இருந்திருக்கிறது. அதுபோல புனேயில், மொத்தமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 33289-ஆகவும், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 43324ஆகவும் இருந்திருக்கின்றன. மும்பையில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. அவர் தன்னுடைய ஓட்டு கூட தனக்கு எப்படி விழாமல் போனது என்று பரிதாபமாக கேள்வி எழுப்புகிறார். இதுபோல் அங்கங்கு அதிர்ச்சிகளும், கோபங்களும் எழ, எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கின்றன.முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், சமூக ஆர்வலருமான கோல்சே பட்டீல் என்பவர் இந்த எதிர்ப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டு இருக்கிறார். மோடி மற்றும் அமித்ஷாவின் கடந்தகால நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்திருக்கக் கூடும் என்று உறுதியாக நம்புவதாக சொல்கிறார். வாக்குச் சீட்டு அளிக்கும் இயந்திரங்கள் வேண்டும் என குரல் எழுப்புகிறார். இந்த மெஷின்களில் ஒரு வாக்காளர் வாக்களித்ததும், அவருக்கு பிரிண்ட் காப்பி கையில் வந்துவிடும்.தேர்தல் ஆணையமும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஞயயீநச கூசயடை அயஉhiநே எனப்படும் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தவேண்டும் என சொல்லியிருக்கிறது. ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்கிறது என குற்றம் சாட்டிய பாஜக எம்.பி கிரித் சோமையா, இப்போது எந்த தவறும் நிகழ வாய்ப்பில்லை என்கிறார்.பாஜகவினரின் நடவடிக்கைகள் கடும் சந்தேகத்துக்குரியவையாய் இருக்கின்றன. நேற்று கூட நாட்டின் ஜிடிபி புள்ளி விபரங்களிலேயே கள்ளக்கணக்கு காட்டி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கின்றன.24 நேரமும் களவாணித்தனம்தான்! மோடி படையின் தளபதி... நேற்றிலிருந்து டுவிட்டரில் அதிக டிரெண்டிங் உள்ள டேக் #namosexarmy என்பதாம். மத்தியப்பிரதேசத்தில் குவாலியர் அருகே டினு ஜெயின் என்பவன் ஒரு செக்ஸ் விடுதி வைத்து தேசபக்தி காரியம் செய்ததில் கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான். அவன் Narendra Modi Army Brigade(நரேந்திர மோடி ராணுவப் படை) என்னும் அமைப்பின் நிறுவனர் என்பது கைதுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #namosexarmy என மக்கள் புருடா மன்னனையும் அவரது படைத்தளபதியையும் கிழித்து எறிந்து கொண்டு இருக்கிறார்கள். வழக்கம்போல ஊடகங்கள் உண்மைகளை விழுங்கியபடி வேறெங்கோ பார்த்து கதைத்துக்கொண்டு இருக்கின்றன. ‘எங்கள் தூய்மையான அரசாங்கத்தை மக்கள் வரவேற்கிறார்கள்’ என, எதாவது ஒரு கூட்டத்தில் புருடா மன்னனும் கதைத்துக்கொண்டு இருப்பார். - ஜா.மாதவராஜ் பொய் சொல்லக் கூடாது பிரதமரே! நவம்பர் மாதத்தில் பாட்னா-இந்தூர் விரைவு ரயில்உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் 140 பேர் மரணமடைந்தனர். சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்த விபத்துக்கு எல்லைக்கு அப்பாலிருந்து சிலர் செய்த சதியே காரணம் என்று பகிரங்கமாகச் சொன்னார். அதாவது தீவிரவாதச் செயல் என்கிற பொருள்படும்படி. இந்நிலையில் வியாழனன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூட்டிய கூட்டத்தில் உத்தரப்பிரதேச ரயில்வே போலீஸின் தலைவர் இந்த விபத்திற்கு பழுதடைந்த பழைய தண்டவாளங்கள்தாம் காரணம், விபத்து நடந்த இடத்தில் எந்த வெடிபொருளும் கைப்பற்றப்படவில்லை என்று கூறிவிட்டார். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு சகஜம். ஆனால் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்று ஒரு பிரதமரே இறங்கியிருப்பது இதுவே இந்திய வரலாற்றில் முதல் முறையாக இருக்கும். -ஆர்.விஜயசங்கர் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட இல்லை உ பி யில் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மக்களில் 22ரூ பேர் முஸ்லிம்கள். ஆனால் பாஜக, ஒரு முஸ்லிமைக்கூட தனது வேட்பாளராக நிறுத்தவில்லை. இதன் மூலம் அது எந்த அளவுக்கு வகுப்புவாத-வருணாசிரம கட்சி என்பது பளிச்சென்று தெரிந்துபோனது. இப்படி பச்சையாக அம்பலப்படுவதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கூட விரும்பவில்லை. ஆகவே அவர் எதிர்த்திருக்கிறார். ஆனால் அந்த மாநில பாஜக தலைவரும், வினய் கட்டியார் எம்பியும் நியாயப்படுத்தியிருக்கிறார்கள். -அருணன் http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
