SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 4, 2017

THEEKATHIR: சேர்ந்து சிந்திப்போம்! தமிழில் : அ.அன்வர் உசேன் ***********************மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், ‘THINKING TOGETHER’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் வெளியாகி வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் பதிலளிக்கிறார். குடும்ப அரசியல் உருவாவது ஏன்? கேள்வி: தேர்தல் காலங்களில் இந்திய மக்கள் மன அளவில் பரம்பரை அரசியலை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறதே! தமிழகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன கருதுகிறது? -அசித் சென்குப்தா/மேற்குவங்கம் பதில்: இந்தியாவில் பரம்பரை அரசியல் போக்கு வளர்ந்து கொண்டு வருகிறது. இது முதலில் காங்கிரஸ் கட்சியில் நேரு- காந்தி குடும்பத்தில் வெளிப்பட்டது. பின்னர் இப்போக்கு விரிவடைந்தது. இப்பொழுது இது வழக்கமான நிகழ்வாக ஆகிவிட்டது. குறிப்பாக இந்த போக்கு மாநில கட்சிகளில் அதிகமாக நிகழ்கிறது.நீங்கள் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை பார்த்தால் உ.பி., பஞ்சாப், பீகார், ஒடிசா, தமிழகம் போன்ற பல மாநிலங்களில் குடும்ப அல்லது பரம்பரை அரசியல் நடப்பதை பட்டியல் இடலாம். பஞ்சாபில் அகாலிதள ஆட்சியில் தந்தை முதல்வராகவும் தனயன் துணை முதல்வராகவும் உள்ளனர். அவர்களே கட்சியின் தலைவர்களாகவும் உள்ளனர். உ.பி. மற்றும் ஒடிசாவில் இன்றைய முதல்வர்கள் முன்னாள் முதல்வர்களின் மகன்களாக உள்ளனர். இந்த தந்தையர்கள் அவர்களின் கட்சியின் நிறுவனர்களாகவும் இருந்துள்ளனர். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் குடும்ப அரசியல் கோலோச்சுகிறது என்பது தெரிந்த ஒன்று.தமிழகத்தில் தி.மு.க.வில் திரு. கருணாநிதி அவர்களுக்கு பிறகு அவரது மகன் மு.க. ஸ்டாலின் பொறுப்புக்கு வந்துள்ளார். (கருணாநிதி குடும்பத்தின் வேறு சில உறுப்பினர்களும் பொறுப்பில் உள்ளனர்). அ.இ.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு அதிகாரச் சண்டை நடந்தது. வி.கே.சசிகலா கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். சசிகலா ஜெயலலிதாவின் இரத்த உறவினர் அல்ல. எனினும் அவர் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர் என்றுதான் அறியப்படுகிறார். இத்தகைய நிலை பா.ம.க., தேசியவாத காங்கிரஸ் போன்ற பல கட்சிகளில் உள்ளது. பா.ஜ.க.வும் இதற்கு விதிவிலக்கு அல்ல.பரம்பரை அரசியல் தலைதூக்குவதற்கு இரண்டு வளர்ச்சிப் போக்குகள் காரணங்களாக உள்ளன. முதல் காரணம்: இந்த கட்சிகள் ஒரு தலைவரை மையமாக வைத்தே இயங்குகின்றன. இதன் காரணமாக இத்தகைய கட்சிகளுக்குஒரு ஆழமான சித்தாந்தம் அல்லது திட்டம் என்பது இல்லை. அந்த தலைவருக்கு அடுத்த கட்டத்தில் வேறு தலைவர்கள் கொண்ட அணியும் இருப்பது இல்லை. அவ்வாறு அனுமதிக்கப்படுவது இல்லை. அத்தகைய சூழலில் தலைவரின் அதிகாரம் அவரது மகன் அல்லது மகளுக்கோ அல்லது வாழ்க்கை துணைக்கோ மாற்றப்படுகிறது.பரம்பரை அரசியலுக்கு இரண்டாவது காரணம் அரசியலும் தொழிலும் மேலும் மேலும் இரண்டறக் கலந்து வருவதாகும். ஆட்சியில் இருக்கும்பொழுது தலைவரும் அவரது குடும்பத்தாரும் அபரிமிதமாகச் செல்வம் சேர்க்கின்றனர். பல்வேறு தொழில்களைச் செய்து இலாபம், கொள்ளை அடிக்கின்றனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட சொத்துக்களையும் செல்வத்தையும் பாதுகாக்க ஆட்சி மற்றும் கட்சியின் அதிகாரம் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியமாகிறது. உதாரணத்திற்கு பஞ்சாபில் பாதல் குடும்பத்தினர் பல்வேறு தொழில்களில் பரவலாக முதலீடுகள் செய்துள்ளனர். இந்த முதலீடுகளையும் தொழில்களையும் பாதுகாப்பது என்பது தலைமை பொறுப்பை தக்கவைத்துக்கொள்வதன் தேவைகளில் ஒன்றாக மாறுகிறது.தற்சமயம் உள்ள நவீன தாராளமயக் கட்டத்தில் பொதுநலனை சுயநலனுக்கு உட்படுத்திக்கொள்வதும் அரசியலையும் தொழிலையும் ஒன்றிணைத்துக் கொள்வதும் பரம்பரை/குடும்ப அரசியல் வடிவமாக மாறியுள்ளது. இதில் பழைய நிலப்பிரபுத்துவ மதிப்புகளான கண்மூடித்தனமான ஆதரவும் விசுவாசமும் பெரும் பங்கு வகிக்கின்றன. அடிப்படையில் இது ஜனநாயக விரோத அம்சமாகும்.சாதிய பற்றும் குழு விசுவாசம் கணிசமாக உள்ள ஒரு சமூகத்தில் பரம்பரை அரசியல் என்பது தவறானது அல்ல எனும் எண்ணம் கணிசமானவர்களிடம் உள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது http://epaper.theekkathir.org/