This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, March 1, 2017
ஆர்எஸ்எஸ் என்ற தீமை... 1ம்பக்கத் தொடர்ச்சி ***************** பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தில்லி பல்கலை.க்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கில் தில்லியில் திரண்டனர். அவர்கள் ஆர்எஸ்எஸ்- ஏபிவிபி குண்டர்களுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்ட அவர்கள், மாணவர்கள் பேராசிரியர்களைத் தாக்கிய குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதில் இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கழகம் உள்ளிட்ட மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தில்லியில் உள்ள கல்சா கல்லூரியி லிருந்து தில்லி ஆர்ட்ஸ் ஃபேகல்டி கிரௌண்ட் வரை நடைபெற்ற இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய ாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி.யும் கலந்துகொண்டார். அப்போது, தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி கும்பல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய யெச்சூரி,மதவெறி சக்திகளுக்கு எதிராக, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை அடுத்து இப்போது தில்லிப் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் வரலாறு படைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.“இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வகுத்துத் தந்திருப்பது இந்திய தேசியவாதம்; ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக விரும்புவது ‘பாசிஸ்ட் இந்துத்துவா தேசியவாதம்’; அவர்கள் கூறும் இந்துத்துவா தேசியவாதமானது மக்களை மத அடிப் படையில் பிளவுபடுத்துவது; இத்தனை ஆண்டு காலம் நாம் போற்றிப் பாதுகாத்து வரும் மத நல்லிணக்கத்தை வேரறுப்பது; இதனை நாம் அனுமதிக்க முடியாது” என்று கூறிய யெச்சூரி, “இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்துடனும், உரிமைகளு டனும் சமரசம் செய்துகொள்ள முடியாது; ஏனெனில் எதிர்காலத்தில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான அடிப்ப டையே சுதந்திரமும் உரிமையும்தான்” என்றார்.அந்த வகையில், “இந்தியாவின் எதிர்காலமான மாணவர்கள், என்ன உண்ண வேண்டும், எதனை உடுத்த வேண்டும், எவரெவருடன் நட்பு கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, இதைஆர்எஸ்எஸ்- பாஜக- ஏபிவிபி குண்டர்கள்தீர்மானிக்க விட முடியாது”; என்றுகூறிய யெச்சூரி, “இப்போது நடந்துகொண்டிருக்கும் அரசியல் போராட்டம் என்பது இடதுசாரிகளுக்கும் வலதுசாரி களுக்கும் இடையேயானது அல்ல; இந்தப் போராட்டம் சரியானவர்களுக்கும், தவறானவர்களுக்கும் இடையேயான போராட்டம்; சிறந்ததோர் இந்தியாவை கட்டி எழுப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும், அதனை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று துடிப்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்” எனவும் தெரிவித்தார்.“நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றுவிரும்பும் நல்லெண்ணம் கொண்டோர் அனைவரும் இந்துத்துவா வெறியர் களுக்கு எதிராக- இடதுசாரிகள் நடத்தும்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்” என்றும் யெச்சூரி அழைப்புவிடுத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா எம்.பி. உள்ளிட்டோரும் பேரணி- ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். http://epaper.theekkathir.org/
Labels:
RSS/BJP