SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன் ***********************இதய நோய் ஸ்டெண்ட்... பிரதமரின் ஸ்டண்ட்... ஏற்கெனவே ‘‘பொருளியல் அரங்கில்’’ இதய அடைப்பை சரிசெய்வதற்காக பொருத்தப்படும் ஸ்டெண்டுகளில் அடிக்கப்பட்ட பெருங்கொள்ளையையும், அதைத் தடுக்க இந்திய மருந்து விலை ஆணையம் தலையிட்டதையும் குறிப்பிட்டிருந்தோம். சாதாரண உலோக ஸ்டெண்டுகள் ரூ.45,000லிருந்து ரூ.7,260க்கும், மருந்து தோய்ந்த உயர்ரக ஸ்டெண்டுகள் 1.2 லட்சத்திலிருந்து ரூ.29,600க்கும் விலை குறையுமென அறிவிக்கப்பட்டது.இதற்கு முகநூலில் எதிர்வினை ஆற்றிய சிலர் பாஜக அரசின் நடவடிக்கையை வரவேற்க வேண்டாமா? என்று கேட்டிருந்தார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குர்சகாய்கஞ்ச் என்ற ஊரில் நடந்தேறிய தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் பல ஆண்டுகள் செய்யத் தவறியதை தான் செய்துவிட்டதாகப் பெருமை அடித்துள்ளார். இந்தியப் பிரதமருக்கு இந்திய ஏழைகள் மீது இவ்வளவு அக்கறையா? என வியந்து போய் இணையதளத்திற்குள் தேடிப் பார்த்தால் உண்மை ஓங்கிச் சிரிக்கிறது.பிப்ரவரி 2015ல் தில்லி உயர்நீதிமன்றத்தில் அத்தியாவசிய மருந்து பட்டியலில் இதயநோய் ஸ்டெண்டுகளை இணைக்க பொதுநல மனு ஒன்று தாக்கலாகிறது. அம்மனு விசாரிக்கப்பட்டு அதற்கான தீர்ப்பும் தரப்படுகிறது.ஜூலை 15, 2015 வரை அத்தீர்ப்பு அமலாகாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படுகிறது. அதற்கான அமர்வு அக்டோபர் 2016ல் வரும்போது ஜூலை 2016லிலேயே அத்தியாவசிய மருந்து பட்டியலில் ஸ்டெண்டுகளை இணைத்துவிட்டதாக அரசு விளக்கம் கொடுத்து அப்போதைக்கு தப்பித்துக் கொண்டது. அதற்குப் பிறகும் விலை குறைந்தபாடில்லை.காரணம் அதற்கடுத்த கட்டம் நோக்கி அரசு நகரவில்லை. விலைக் கட்டுப்பாட்டிற்கு வழிசெய்யும் பட்டியல் 1இல் ஸ்டெண்டுகள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் ஸ்டெண்டுகளில் விலைக்கு உச்சவரம்பு விதிக்க முடியும்.மூன்றாவது முறையாக நீதிமன்றத்தின் கதவு நவம்பர் 2016ல் தட்டப்படுகிறது. இன்னொரு மனுவின் மீது விசாரணை நடைபெறுகிறது. டிசம்பர் 7, 2016 அமர்வில் அரசிடம் விளக்கம் கோரப்படுகிறது. டிசம்பர் 22, 2016 அமர்வில் மார்ச் 1, 2017க்குள்ளாக ஸ்டெண்டுகளின் விலைகளைக் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.இப்பின்புலத்திலேயே ஸ்டெண்டுகளுக்கான விலை உச்சவரம்பை நிர்ணயிக்கிற முடிவை மத்திய அரசு முடிவெடுக்கிறது. நீதிமன்றம் இடி... இடியென்று இரண்டு ஆண்டுகளாக இடித்து நகர்த்திய உச்சவரம்பு முடிவைத் தானே எடுத்ததாகத் ‘தைரியமாய்’ தம்பட்டம் அடிக்கிற பிரதமரை என்ன சொல்வது?இத்தோடும் பிரச்சனை முடிந்துவிடவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் (பிப்ரவரி, 17 - 2017) செய்தியைப் பாருங்கள். ஸ்டெண்ட் விலைகள் குறைக்கப்பட்ட பின்னணியில் அதற்கு செயற்கைத் தட்டுப்பாடு சந்தையில் உருவாக்கப்பட்டிருக்கிறதென்று செய்தி இது கார்ப்பரேட்டுகளின் ‘தைரியம்’. தனியார் மருத்துவமும்தறிகெட்ட லாபமும் இந்து நாளிதழின் (பிப்ரவரி 26, 2017) செய்தி நமக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கல்புர்கி மாவட்டத்திலுள்ள 4 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.காரணம் வணிகக் காரணங்களுக்காக எந்தவித மருத்துவ நியாயமும் இல்லாமல் கருப்பை அறுவைச் சிகிச்சைகளை அம்மருத்துவமனைகள் அரங்கேற்றி வந்துள்ளன.அக்டோபர் 2015ல் இக்குற்றச்சாட்டின் மீதான விசாரணை துவங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளாக நடந்தேறிய 2258 கருப்பை அறுவை சிகிச்சைகள் மீது ஆய்வு செய்யப்பட்டு அம்மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காசுக்காக கருப்பையை அகற்றுகிற கயமைத் தனத்தை உயிர்காக்க வேண்டிய மருத்துவமனைகளே அரங்கேற்றுவதுதான் வணிகமயமாகியுள்ள தனியார் மருத்துவத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. வீழ்கிற விவசாயம்...வாழ்கிற கார்ப்பரேட்... தாவரப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்புத்துறையின் துணைப் பொது இயக்குநர் பி.கே.சக்ரவர்த்தியின் தகவலைப் பாருங்கள். (இந்து நாளிதழ் பிப்ரவரி 26, 2017) மொத்தப் பயிர் விளைச்சலில் 35 சதவீதத்தைப் பூச்சிக் கொல்லி மருந்துகளே சாப்பிட்டு விடுகின்றனவாம். இப்படி அழிந்து போகிற பயிர்கள் மொத்தம் 6 கோடி டன்கள். இது உணவுப் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார் சக்ரவர்த்தி. இப்படிப் பயிர்வளம் பாதிக்கப்படுவது ஒருபுறம் எனில் தங்களது கல்லாக்களில் கொட்டுகிற லாபத்தை எண்ணுகின்றன பன்னாட்டு பயிர் ரசாயன நிறுவனங்கள் மறுபுறம்.அவுட்லுக் பிசினஸின் (19.9.2016) செய்தியைப் புரட்டிப் பாருங்கள். பேயர் நிறுவனம் மான்சாண்டோ நிறுவனத்தை 66 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய பின்னர் இந்திய விவசாய விதைகள் & ரசாயனச் சந்தையில் 60 சதவீதத்தை அவை இரண்டும் சேர்ந்து கட்டுப்படுத்துகின்றன. இப்படி பகாசுர நிறுவனங்களின் இணைப்பு உலக அளவில் தொடர்ந்து நடைபெறுகிறது டோகெமிக்கல்ஸ் டூ பாண்ட் இணைப்பும், செம்சைனா - சின்ஜெண்டா இணைப்பும் உதாரணங்கள் ஆகும். இவர்களின் கைகுலுக்கல்களில் இந்திய விவசாயிகளின் நலன் சிக்கிச் சீரழிகிறதா? மன அழுத்தம் ஏன்? விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. கடந்த வாரம் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின்(று.ழ.டீ) அறிக்கை மன அழுத்தமே உலகளாவிய ஊனத்திற்கு முதற்பெரும் பிரச்சனையாக உள்ளது என வர்ணித்துள்ளது. 2005-2015க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்தியாவில் 2015ல் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 5,66,75,969. அதாவது மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதமாம். ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளால் மனப் பிறழ்ச்சி அடைபவர்கள் 3,84,25,093. இது 3 சதவீதம் நூற்றில் 8 பேர் இப்படித்தான் இருக்கிறார்களாம். THEEKATHIR