SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 1, 2017

பாசமிகு சகோதரி நந்தினிக்கு... ****************************ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய உங்கள் அண்ணன்மார்கள் உங்களுக்காகவும் போராட முன்வருவார்கள்! நம்பிக்கை வையுங்கள். ****************************************** உன் உடன்பிறவா சகோதரன் எழுதும் கடிதம். நீ அண்ணன் என்றுஅழைத்தால் அகம் மகிழ்வேன்; அதிலும் ‘தோழர்’ என்றழைத்தால் பெருமையடைவேன்;நந்தினி... நீ மறைந்து விட்டாயாமே! உனை அழித்துவிட்டார்களாமே! உன் சின்னஞ்சிறிய சிசுவை எரித்துவிட்டார்களாமே!தைப் பொங்கலின் உற்சவத்தில் தமிழகமேமகிழ்ந்திருக்க... ஜல்லிக்கட்டு உரிமை காக்க மாணவர்கள் எழுச்சிகொள்ள துவங்கி யிருக்க... தமிழச்சியே... இல்லை தலித் ‘தமி ழச்சியே’ நான்கு சாதியக்கரையான்கள் உன் தசைகளை அரித்து தின்றுவிட்டு போகிக் குப்பையாய் உன்னை ஆழ்கிணற்றுக்குள் வீசி எறிந்துவிட்டனவாமே!தைப்பொங்கல் திருநாளன்று உன்னை அந்த பாழுங்கிணற்றிலிருந்து அழுகிய சடலமாய் அள்ளி எடுத்தார்களாமே! நீ பிறந்த போது என்னைப் போல சாயல் என்று உன் தாயும்... இல்லை, இல்லை... என்னைப் போல சாயல் என்று உன் தகப்பனும் பூரித்துப் போயிருப்பார்கள்; ஆனால், யாருடைய சாயலையும் அடையாளம் காணமுடியாத படி உன்னைக் கண்டெடுத்தபோது உயிரைக் கையில் பிடித்திருப்பார்கள்!நீ காணாமல் போன போதே காவல்நிலை யத்தில் புகார் அளித்தும் அதனைக் கண்டு கொள்ளவில்லையாமே- ஒருவேளை துரிதநடவடிக்கை எடுத்திருந்தால் உன் உயிரை யாவது காப்பாற்றி இருக்கலாம்; அந்தக் காக்கிகள் எந்த ‘ஆண்ட’ சாதியின் ஆதிக்க சக்திகளிடம் அடைக்கலம் ஆகியிருந்ததோ... நந்தினி.. எப்படி நீ ஏமாந்து போனாய்...? உன் வெள்ளந்தி மனதுக்கு உன்னை அடைய விரும்பியவனை வெள்ளெருக் கஞ்செடியென்று தெரியவில்லையோ..!‘செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்றே உன் வாழ்க்கையும் அமையும் என நினைத்தாயோ... உன்னை ‘விரும்பியவனோ’ செங்குருதியால் உனை நனைப்பான் என நீ முன்னமே அறியலையோ..!இளவரசனாய்... கோகுல்ராஜாய்... சங்கராய்... உயிர் தந்தும் காதலை வாழ வைப் பான் என்றும் கூட நம்பி நீ இருந்தாயோ..!முன்னர் உயிரிழந்த மூவருக்கும் காதலோசாதிய விடுதலைக்கான வழி; அதனால் தான்உயிரைக் கொடுத்தும் காதலை வாழ வைத்தார்கள். உன்னை அடைய விரும்பிய வனுக்கோ காதல் காம சிகிச்சைக்கான வழி; அதனாலேயே இச்சையை தீர்த்துக் கொண்டு உன்னை அழித்துவிட்டான். அவர்கள் உன்னை மட்டுமா அழித் தார்கள்..! உன் கீழ்வயிறு கிழித்து அங்கேமலர்ந்தும் மலராதிருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் எரித்தார்கள்! காட்டு மிராண்டிகளுக்கும் கீழான இலக்கணமாய் தன்னையே வரித்துக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் எரித்த சிசு மறித்துச் சாம்பலாகவில்லை; அக்னிக்குஞ்சாய் உயிர் ஜனித்துசிறகு விரித்து மேலெழும்பிப் பறந்தது!மேலெழும்பிப் பறந்த அக்னிக்குஞ்சு எங்கேயும் போகவில்லை. அது அங்கேயே தான் இருக்கிறது. நந்தினி... உன்னைக் கண்டெடுத்த கிணற்றைச் சுற்றி சுற்றி வருகிறது; அதன் ஒளிரும் கண்கள் செம்போத்துப் பறவையின் செக்கச் சிவந்த கண்களைப் போலிருந்தது. அது பார்க்கவே பயங்கரமாய் அச்சமூட்டக்கூடியதாய் இருக்கிறது; அதன்இளம் சிறகுகள் தங்க நிறத்தீயின் நாக்கு களைக் கொண்டுள்ளது; நெருப்புக் குழம்பில் அது கால்பதித்து நின்று கொண்டுள்ளது; பசிக்கும்போது ஓடிச்சென்று அது நெருப்புக் கங்குகளை விழுங்குகிறது; நெருப்புக் கங்கை தொண்டைக்குழிக்குள் இறக்கிவிட்டு, மந்தகாசமாய் அது புன்னகைக்கிறது; பின்னர் சாவகாசமாய் நடந்துசென்று கிணற்றைக் கடந்து செல்லும் பாதையின் வழியே தடம்பதித்துள்ள அந்த நான்கு பேரின் பாதச்சுவடுகளை உற்று நோக்குகிறது; அங்கிருந்த வண்ணமே அந்தப் பாதையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது; அது ‘யாருக்கா கவோ’ காத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது; அதை தவம் போல் செய்கிறது.இப்போது வேகமாய் திரும்பி ஓடிச்சென்று கிணற்றுச்சுவரின் மேல் தாவிக்குவித்து உள்ளே எட்டிப்பார்க்கிறது. இனி அது ‘பாழுங்கிணறு’ அல்ல; பாசக்கிணறு..!அந்தக் கிணற்றுத் தண்ணீரின் நடுவே இதழ், விரிந்த செந்தாமரையாய் நீயும்... அருகேசின்னஞ்சிறிய மொட்டாக உன் சிசுவும் வீற்றிருக்க, சுற்றிலும் தேவதைகள் போலவெண்ணிறத்து அல்லி மலர்கள் மலர்ந் திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் மனக்கண்ணில் விரிகிறது.நந்தினி... உன்னைச் சிதைத்த சாதிக்கறை யான்களுக்கு அடைக்கலம் தருவதும்... அது பிறநத்ததுவும்... வளர்ந்ததும் வருணாசிரம புற்றுத்தான் என்பதை மறந்துவிடாதே. அங்கேதான் உலகின் மிகக்கொடிய விஷ ஜந்துக்களெல்லாம் வாசம் செய்கின்றன.சனாதன வெறிகொண்டு சாதியம் உனைச்சிதைத்துவிட்டதே என்று வெதும்பி நிற்கும் வேளையில் சென்னையில் ஹாசினி என்னும்ஏழு வயதுச் சிறுமியைக் கொன்றெ ரித்தது ஏது?சந்தேகமே வேண்டாம் முதலாளித்துவம்தான்.நந்தினியே! உன்னை போகிக் குப்பையாய் வீசி எறிந்தது சனாதன தர்ம நிலப்பிரபுத்துவம் என்றால்... ஹாசினியை! நுகர்வுப் பண்டமாய் நுகர்ந்து எரித்துக் கொன்றது உலகமய முதலாளித்துவம்.ஆகவே, கலங்க வேண்டாம்.... நந்தினியே!ஹாசினியே! ஜல்லிக்கட்டுக்காகப் போராடியஉங்கள் அண்ணன்மார்கள் உங்களுக்காகவும் போராட முன்வருவார்கள்! நம்பிக்கை வையுங்கள். தமிழகத்து மாணவர்களே! இளைஞர்களே!நீங்கள் வரலாற்றைப்படிப்பவர்கள் மட்டு மல்ல;உருவாக்குபவர்களும் கூட- எண்ணற்ற நந்தினிகளுக்காகவும், ஹாசினிகளுக்காகவும் கணக்குத் தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமைநம் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே,எவ்வளவு விரைவாகவும்... ஆவேசத்துடனும்முடியுமோ கணக்கைத் தீர்த்துவிடுவோம் வாருங்கள்! ஆம்... இந்த சனாதனதர்ம நிலப்பிரபுத்து வத்தையும், உலகமய முதலாளித்துவத்தையும் கருவறுத்துவிடுவோம். இப்படிக்கு ஏகலைவன் (எ) பாலசுப்பிரமணியன், மதுரை மாநகர். http://epaper.theekkathir.org/